கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிப்பதற்காக புது ஹேர் ஸ்டைலுக்கு மாறுகிறார் அஜீத். மங்காத்தா படத்தில் தனது நிஜ ஹேர் ஸ்டைலான சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தோன்றினார் அஜீத்.
இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் ஆரம்பம், வீரம் படங்களிலும் இதே லுக்கில் தோன்றினார். அடுத்து கவுதம் இயக்கும் படத்தில் துப்பறியும் நிபுணராக அஜீத் நடிக்கிறார்.
இதில் அவரது லுக் வேறு மாதிரியாக இருந்தால் நன்றாக இருக்கும் என கவுதம் விரும்பினாராம். தொடர்ந்து தனது எல்லா படங்களிலும் நிஜ லுக்கிலே நடிக்க அஜீத் யோசித்துள்ளார்.
இதனால் புது லுக் பற்றி அஜீத்திடம் கவுதம் தயங்கியபடி சொல்லியிருக்கிறார். கதைக்கு தேவையென்றால் லுக் மாற்ற நான் ரெடி என அஜீத் சொல்லிவிட்டாராம். இதையடுத்து அவரது ஹேர் ஸ்டைல் மற்றும் லுக்கை மாற்ற கவுதம் முடிவு செய்திருக்கிறார்.
இதற்காக பாலிவுட்டை சேர்ந்த ஹேர் ஸ்டைல் டிசைனர் ஒருவருடன் கவுதம் ஆலோசித்து வருகிறார். முதல்முறையாக ரெட் ஹேர் லுக் அஜீத்துக்கு கொடுக்கலாமா என்று கூட யோசித்துள்ளார்களாம். புது ஹேர் ஸ்டைல் முடிவான பிறகும் அதை சஸ்பென்ஸாகவே வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது

0 comments:
Post a Comment