ஆந்திராவில் தியேட்டர் கிடைக்காததால் தமிழ் பட ரிலீசை தள்ளிப்போட்டார் இயக்குனர் சேரன். சர்வானந்த், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் நடிக்கும் படம் ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை. சேரன் இயக்கி உள்ளார்.
இதன் ஷூட்டிங் முடிந்து கடந்த மாதங்களிலே ஒன்றிரண்டு முறை ரிலீஸ் தேதி முடிவு செய்யப்பட்டது. ஆனால் விஜய், அஜீத் நடித்த பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆனதால் தனது பட ரிலீசை தள்ளி வைத்தார் சேரன்.
தற்போது தமிழில் ரிலீஸ் செய்வதற்கான அளவில் தியேட்டர்கள் கிடைத்திருந்தாலும் பட ரிலீசை தள்ளிப்போட்டு வருகிறார். தமிழ், தெலுங்கில் இப்படத்தை ஒரே நாளில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளோம், ஆனால் ஆந்திராவில் போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லை.
இதனால் தமிழ் ரிலீசையும் தள்ளி வைக்கவேண்டியதாகிவிட்டது. சில சூழ்நிலைகளை கருத்தில்கொண்டு 2 மொழியிலும் ஒரே நாளில் படத்தை ரிலீஸ் செய்வதற்கான நேரம் பார்த்து வருகிறோம். இருமொழியிலும் போதுமான தியேட்டர்கள் கிடைத்தவுடன் படம் ரிலீஸ் ஆகும் என்று பட தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

0 comments:
Post a Comment