3' படத்தில் கொலவெறிப் பாடல் மூலம் திரும்பிப் பார்க்க வைத்தவர் அனிருத். உலக அளவில் அனிருத் ஒரே பாடலில் பிரபலம் ஆனார்.
அடுத்து 'எதிர்நீச்சல்', 'வணக்கம் சென்னை' படங்களில் தன்னை நிரூபித்தார். 'இரண்டாம் உலகம்' படத்தின் பின்னணி இசையில் கவனம் ஈர்த்தார்.
தற்போது 'வேலையில்லா பட்டதாரி' படத்துக்கு இசையமைத்துள்ளார்.
அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் விஜய் படத்துக்கும், கௌதம் மேனன் இயக்கும் அஜித் படத்துக்கும் இசையமைக்கிறார்.
இதனால் அனிருத் இந்த இரண்டு படங்களின் இசையிலும் பெரிய மாற்றங்களைக் கொண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டு பெரிய பட்ஜெட் படங்களுக்கு இசையமைப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் அனிருத்.

0 comments:
Post a Comment