இஷ்டம் படத்தில் நடித்த காஜலின் தங்கை நிஷா அகர்வாலின் திருமணம் சமீபத்தில்தான் நடைபெற்றது. அதையடுத்து, காஜல் அகர்வாலை எப்போது திருமணம் செய்யப்போகிறீர்கள்? என்று மீடியாக்கள் துருவி துருவி கேட்டதையடுத்து, சினிமாவில் நீண்டகாலம நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன்தான் வந்தேன்.
அதற்கேற்ப தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் எனக்கு வரவேற்பு இருக்கிறது. அதனால், இன்னும் குறைந்தபட்சம் 5 வருடங்களாவது சினிமாவில் நீடிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார் காஜல்.
இருப்பினும், ஆந்திராவில் உள்ள ஒரு தொழிலதிபரை காஜல் காதலித்து வருவதாக அவ்வப்போது புகைந்து வந்த செய்து இப்போது இன்னும் பத்தி எரியத் தொடங்கியிருக்கிறது. காரணம், அந்த தொழிலதிபர் வீட்டில் காஜலை அவர் காதலிப்பதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்களாம்.
கூடவே அவருக்கு வேறு பெண்ணையும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடக்கிறதாம். ஆனால் காஜலை மறக்க முடியாத தொழிலதிபர், ரகசிய திருமணம் செய்து கொள்ளலாம் என்று காஜலை வற்புறுத்தி வருகிறாராம்.
ஆனால் காஜல் அதற்கு உடன்படவில்லையாம். இந்த செய்தி கொளுந்து விட்டு எரியும் இந்த நேரத்தில் திருமணம் செய்தால் எரியுற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றிய கதையாகி விடும்.
இதனால் எனக்கு சினிமா மார்க்கெட் சுத்தமாக அவுட்டாகி விடும் என்று காதலரை ஆப் பண்ணி வைத்திருக்கிறாராம். மேலும், இன்னும் சில மாதங்களில் இந்த பிரச்னை அடங்கியதும்.
நாம் காதும் காதும் வைத்த மாதிரி திருமணம் செய்து கொள்வோம் என்றும் கூறியுள்ளாராம். அதற்கு தொழிலபதிரும் இருமனதாக தலையாட்டியிருக்கிறாராம்.

0 comments:
Post a Comment