'பாண்டியநாடு' வெற்றிக்குபிறகு விஷால் பிலிம் பேக்டரி, இயக்குனர் ஹரியுடன் சேர்ந்து படம் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு இன்னும் பெயர்வைக்கவில்லை.
இயக்குனர் ஹரி தமிழில் ‘சாமி’, ‘ஆறு’, ‘சிங்கம்’, உள்ளிட்ட பல படங்களை இயக்கி வெற்றிபெற்றவர். ஏற்கனவே ‘தாமிரபரணி’ மூலம் இயக்குனர் ஹரியும், விஷாலும் இணைந்து வெற்றிப்படத்தை கொடுத்தனர்.
அந்தப்படத்தில் பணியாற்றிய பாடலாசிரியர், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோரும் மீண்டும் இணைகிறார்கள். இந்த வெற்றிக் கூட்டணிக்கு மீண்டும் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது விஷால், லட்சுமி மேனனுடன் இணைந்து ‘நான் சிகப்பு மனிதன்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன், ஹரி இயக்கும் படத்தில் நடிக்க தொடங்குவார்.

0 comments:
Post a Comment