விஜய் மில்டன் இயக்கிய படம் கோலிசோடா. இப்படம் வெற்றி பெற்றதையடுத்து நேற்று விழா கொண்டாடினர். இதில் பசங்க பட இயக்குனர் பாண்டிராஜ் பேசியதாவது: கோலிசோடா படத்தின் கதையை என்னிடம் விஜய் மில்டன் சொல்லி அதை தயாரிக்கும்படி கூறினார். நீயே தயாரிப்பாளராக மாறிவிடு என்றேன். முதலில் தயங்கினார். மெரினா படத்தை நான் இயக்கியபோது அப்படத்தை நானே தயாரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன்.
அது என்னால் முடிந்தது. அதை விஜய் மில்டனிடம் கூறியதுடன் நானே பணம் தந்து படத்தை அவரது சொந்த பேனரில் தயாரிக்கச் சொன்னேன். அதேபோல் சுசீந்திரன், நவீன் ஆகியோரையும் சொந்த பேனர் தொடங்கி படம் தயாரிக்க வைத்தேன். விரைவில் சிம்பு தேவன், சீனு ராமசாமி ஆகியோரையும் தயாரிப்பாளர் ஆகச் சொல்லி இருக்கிறேன்.
நான் தற்போது கமர்ஷியல் படங்கள் இயக்குவதால் அதில் சிலருக்கு வருத்தம் இருக்கிறது. ஆனால் அது சினிமாவில் முக்கிய தேவையாக இருக்கிறது. விரைவில் பசங்க, கோலிசோடா பாணியில் ஒரு படத்தை இயக்க உள்ளேன். இவ்வாறு பாண்டிராஜ் பேசினார். நிகழ்ச்சியில் கோலிசோடா படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் டெக்னீஷியன்கள் கலந்துகொண்டனர்.

0 comments:
Post a Comment