இளமை மாறாமல் இருக்க பெரும் செலவு செய்து அடிக்கடி மூலிகை குளியல்Õபோடுகிறார் நயன்தாரா. காதல் தோல்வியால் மனம் வாடிப்போய் இருந்த நயன்தாராவுக்கு மீண்டும் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. மனதுக்குள் சோகம் இருந்ததால் வெளிதோற்றத்திலும் சோர்வு தெரிந்தது.
இதை கவனித்த அவரது தோழிகள், நிறைய படங்கள் வந்துக்கொண்டிருக்கும் நிலையில் நீ முன்புபோல் ஜொலி ஜொலிப்பாக இருக்க வேண்டியது அவசியம். கேரளாவை சேர்ந்த உனக்கு அந்த ஜொலி ஜொலிப்பை எப்படி திரும்ப பெறுவது என்ற டெக்னிக்கை சொல்லித் தரவேண்டியதில்லை.
இதற்கான ஆயுர்வேத மூலிகை குளியல் பிரபலம்தானே. அதை தவறாமல் செய்துவந்தால் உன்னை மிஞ்ச முடியாது என்று உசுப்பிவிட்டனர். நயன்தாராவுக்கும் அந்த யோசனை சரியெனபட்டதால் உடனடியாக மூலிகை குளியலுக்கு தயாரானார். சமீபகாலமாக அடிக்கடி கேரளாவுக்கு சென்று மூலிகை குளியல் போடுகிறார் நயன். நேரம் இல்லாதபோது மற்ற இடங்களில் உள்ள மூலிகை குளியல் அழகு நிலையங்களுக்கு சென்று பளபளப்பை ஏற்றி வருகிறார்.
இதனாலேயே 10 ஆண்டுகள் கழித்தும் அவர் ஃபீல்டில் நிலைத்திருக்கிறார். இப்போதும் இளம் ஹீரோக்கள் ஜோடியாகவே நடிக்கிறார் என நயனுக்கு நெருங்கியவர்கள் கூறினர். அவரது மூலிகை குளியல் ரகசியத்தை அறிந்த ஹன்சிகா, தமன்னா உள்ளிட்ட மேலும் சில நடிகைகள் ரகசியமாக மூலிகை குளியல் போட ஆரம்பித்துள்ளனர்.

0 comments:
Post a Comment