சினிமாவில் நகைச்சுவை என்பது பிளாக் அண்ட் ஒய்ட் காலங்களில் சிரிக்க வைத்து சிந்திக்க வைப்பதாக இருந்தது. வசனங்களில் யதார்த்தம் அதிகமான பிறகு ஒரு சிலர் ஓவராக பேசி காமெடி செய்துவந்தனர். கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் போன்றவர்களும் தங்கள் வசனங்களில் ஆபாச கலப்பும், டபுள் மீனிங் இல்லாமலும் பார்த்துக்கொண்டனர். முழுக்க முழுக்க வசனம் பேசியே காமெடியில் திணறடிக்கும் சந்தானம் இடையே இடையே டபுள் மீனிங் வசனங்கள் பேசுவதாக நீண்ட நாட்களாக புகார் இருந்து வருகிறது.
சமீபத்தில்கூட ‘என்றென்றும் புன்னகை‘ படத்தில் துணை நடிகை ஒருவரிடம் நக்கலாக பேசிய டபுள் மீனிங் வசனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தணிக்கைக்கு பிறகும் அந்த வசனம் இடம்பெற்றிருந்ததால் எதிர்ப்பு வலுத்தது. அதை சமாளிக்க முடியாமல் மாற்றி பேசினார். டபுள் மீனிங் வசன பாணியை சந்தானம் முற்றிலும் கைவிட வேண்டும் என்று பலமுறை விமர்சகர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதை அவரது அம்மாவும் வலியுறுத்தி வந்தாராம். தற்போது தன் அம்மாவிடம், வரும் காலத்தில் டபுள் மீனிங் வசனம் பேசுவதில்லை என்று சத்தியம் செய்துகொடுத்திருக்கிறார் என்று அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அவரது சத்தியம் காப்பாற்றப்படுமா என்பது அடுத்தடுத்து வெளிவரும் படங்களில் தெரியவரும் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.
0 comments:
Post a Comment