Wednesday, 12 February 2014

Leave a Comment

நஸ்ரியா, பஹத் காதலர் தினத்தில் பிரிவதற்கான காரணம்...!



நய்யாண்டி, ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நஸ்ரியா நாசிமுக்கும், மலையாள நடிகர் பஹத் பாசிலுக்கும் கடந்த 8ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி திருமணம் நடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது காதல் திருமணம் அல்ல. இரு குடும்பத்தார் சம்மதத்துடன் நடக்கும் திருமணம் என்று ஏற்கனவே நஸ்ரியா கூறி வந்தார். ஆனால் ஒரே படத்தில் நடித்து வரும்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.

காதல் திருமணமாக இருந்தாலும் கல்யாணத்துக்கு முன்பு அடிக்கடி தனிமையில் சந்திப்பது, வெளியிடங்களுக்கு சுற்றுவது  போன்ற செயல்கள் கண்டிப்பாக கூடாது என இருவரின் குடும்பத்தாரும் உத்தரவிட்டுள்ளார்களாம்.

இந்நிலையில் நாளைமறுதினம் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் நஸ்ரியாவும், பஹத்தும் பிரிந்திருக்க முடிவு செய்துள்ளனர்.

இதுபற்றி நஸ்ரியா கூறும்போது,விரைவில் நான் கன்னடத்தில் அஞ்சலி மேனன் இயக்கும் பெங்களூர் டேஸ் என்ற படத்தில் நடிக்க புறப்படுகிறேன்.

சில நாட்களில் அதன் ஷூட்டிங் முடிந்துவிடும். எனவே காதலர் தினமான 14ம் தேதி நானும், பஹத்தும் வெவ்வேறு இடங்களில் பிரிந்து இருப்போம். இதற்கு காரணம் இருவரும் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதுதான்.

0 comments:

Post a Comment