Wednesday, 12 February 2014

Leave a Comment

டுவிட்டரில் யுவனுக்கு ஆதரவு தெரிவித்த சிம்பு..!



சுஜாயா என்ற பெண்ணுடன் யுவனுக்கு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்ததுடன் சட்டப்படி விவாகரத்து பெற்றனர்.

இதையடுத்து ஷில்பா என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்தார்.அவர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.இந்நிலையில் திடீரென்று சில வாரங்களுக்கு முன் யுவன் இஸ்லாம் மதத்துக்கு மாறினார்.

இதுபற்றி தனது தந்தை இளையராஜாவிடம் அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதை யுவனே தனது இணைய தள பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்நிலையில் யுவனுக்கு முஸ்லிம் பெண் ஒருவருடன் நட்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. யுவன் மதம் மாறியது பற்றி அறிந்த சிம்பு அவருக்கு தனது ஆதரவை இணையதள பக்கமான டுவிட்டர் மூலம் தெரிவித்திருக்கிறார்.

என்ன என்பது விஷயம் கிடையாது. என்னுடைய ஆதரவும், அன்பும் எப்போதும் யுவனுக்கு உண்டு என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். -

0 comments:

Post a Comment