'ரன்', 'சண்டக்கோழி', உள்ளிட்ட பல தமிழ் படங்களில் மீராஜாஸ்மீன் நடித்துள்ளார். மலையாளத்திலும் முன்னணி நடிகையாக உள்ளார். மீராஜாஸ்மினுக்கும் துபாயில் சாப்ட்வேர் என்ஜினீயராக இருக்கும் திருவனந்தபுரத்தை சேர்ந்த அனில் ஜான் டைட்டஸ் என்பவருக்கும் பெற்றோர் திருமணம் நிச்சயம் செய்தனர்.
இன்று இந்த திருமணம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த 9–ந்தேதி இரவு கொச்சியில் உள்ள மீராஜாஸ்மின் வீட்டில் இருவரும் திடீரென ரகசிய பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
சார்பதிவாளர் இவர்கள் வீட்டுக்கே சென்று திருமணத்தை சட்டப்படி பதிவு செய்தார். அவர் கொண்டு வந்த புத்தகத்தில் மீராஜாஸ்மினும் அனில் ஜான் டைட்டசும் கையெழுத்திட்டனர். மாலையும் மாற்றிக் கொண்டார்கள்.
ஆனாலும் ஏற்கனவே அறிவித்தபடி மீராஜாஸ்மின் அனில் ஜான் டைட்டஸ் திருமணம் திருவனந்தபுரம் பாளையத்தில் உள்ள எல்.எம்.எஸ். கிறிஸ்தவ ஆலயத்தில் இன்று காலை 11 மணிக்கு நடந்தது.
இதற்கிடையில் அனில் ஜான் டைட்டஸ் நேற்று கேரள உயர்நீதி மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் எனக்கும் நடிகை மீரா ஜாஸ்மினுக்கும் பிப்ரவரி 12–ந்தேதி சர்ச்சில் திருமணம் நடக்கிறது. எனது மனைவி என கூறி பெங்களூரை சேர்ந்த ஒரு பெண் எனக்கு மிரட்டல் விடுக்கிறார். திருமணம் நடைபெறும் இடத்துக்கே வந்து தகராறு செய்வேன் என கூறுகிறார். எனவே எனது திருமணத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதை ஏற்று திருமணத்துக்கு பாதுகாப்பு அளிக்க போலீசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மிரட்டல் விடுத்த பெண்ணுக்கும் அனில் ஜான் டைட்டசுக்கும் திருமணம் நடத்த முன்பே ஏற்பாடுகள் நடந்ததாகவும் திருப்பதியில் திருமணத்துக்காக சடங்குகள் நடந்தது என்றும் கடைசி நேரத்தில் திருமணம் நின்று போனதாகவும் கூறப்படுகிறது.
அந்த பெண்ணின் தந்தையும் டெலிபோனில் தொடர்பு கொண்டு மீரா ஜாஸ்மினை எப்படி மணக்கிறாய் என்று பார்க்கிறேன் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. எனவேதான் அனில் ஜான் டைட்டஸ் கோர்ட்டை நாடி உள்ளார்.
கோர்ட்டு உத்தரவுப்படி மீரா ஜாஸ்மின், அனில் ஜான் டைட்டஸ் திருமணம் நடந்த கிறிஸ்தவ ஆலயம் எதிரில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். ஆலயத்துக்குள்ளும் மாறு வேடத்தில் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தார்கள். மணமக்கள் வீட்டாரும் பெங்களூர் பெண்ணை தடுக்க தனியார் செக்யூரிட்டிகளை நியமித்து இருந்தனர். அசம்பாவிதம் ஏதுமின்றி திருமணம் நடந்தது.

0 comments:
Post a Comment