இதுவரை ஷூட்டிங்கே நடக்காத கிராமத்தில் ஷூட்டிங் நடந்ததால் விழா கொண்டாடப்பட்டது. சினிமா ஸ்டுடியோக்களுக்குள் நடந்துகொண்டிருந்த தமிழ் பட ஷூட்டிங் இயக்குனர் பாரதிராஜா வருகைக்கு பிறகு கிராமங்களுக்குள் நடக்க ஆரம்பித்தது.
அவரை பின்பற்றி அனைத்து இயக்குனர்களும் கிராமங்களுக்கு படை எடுத்தனர். இதுவரை ஷூட்டிங் நடக்காத ஒரு கிராமத்தில் சூறையாடல் என்ற படத்தின் படபிடிப்பு நடந்தது. இதுபற்றி இயக்குனர் தாமரை கண்ணன் கூறியதாவது:தேனி, கம்பம், குமுளி, பொள்ளாச்சி என தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் தமிழ்பட ஷூட்டிங் நடந்திருக்கிறது.
ஆனால் கம்பத்திலிருந்து 60 கி.மீட்டர் தொலைவில் உள்ள ஆட்டுப்பாறை என்ற கிராமத்தில் இதுவரை படப்பிடிப்பு நடந்ததில்லை. அந்த கிராமத்தில்தான் சூறையாடல் படத்தின் ஷூட்டிங் 70 சதவீதம் நடந்தது. காதலில் எல்லை மீறும்போது ஏற்படும் விளைவுகள்தான் கதை. தங்கள் கிராமத்தில் ஷூட்டிங் நடந்ததை வரவேற்ற அந்த கிராம மக்கள் ஒரு விழாபோலவே கொண்டாடி எங்கள் யூனிட்டுக்கு பரிசு பொருட்கள் தந்து பாராட்டினார்கள்.
கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்ற ஸ்ரீபாலாஜி ஹீரோ. கேரளாவை சேர்ந்த காயத்ரி ஹீரோயின். மற்றும் லீமா, ஜெயன், ஜாக் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தினேஷ் பல்லத் வசனம். அகிலேஷ் ஒளிப்பதிவு. மிதுனேஷ்வர் இசை. சுரேந்திரன் பிள்ளை பந்தலம் தயாரிப்பு. இவ்வாறு இயக்குனர் தாமரை கண்ணன் கூறினார்.

0 comments:
Post a Comment