Thursday, 6 February 2014

Leave a Comment

வருத்தப்படாத வாலிபர் சங்கம் மாதிரி அரசியல்ல இதெல்லாம் சகஜம்மப்பா...



சுந்தர்.சி இயக்கத்தில் உருவான படம் வின்னர். இந்த படத்தில் நாயகன் பிரசாந்தின் அண்ணனாக நடித்திருந்தார் வடிவேலு. வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்றொரு சங்கத்தின் தலைவராக இருக்கும் வடிவேலு, அவ்வப்போது சில்மிஷங்களில் ஈடுபட்டு அடிவாங்கிக்கொண்டேயிருப்பார்.

அப்படம் வந்த நேரத்தில் அந்த காமெடி காட்சிகளும், வடிவேலு பேசிய வசனங்களும் பெரிய அளவில் பேசப்பட்டது.

அதேபோல் பவித்ரன் இயக்கத்தில் சரத்குமார் நடித்த படம் சூரியன். இந்த படத்தில் அரசியல்வாதியாக நடித்திருப்பார் கவுண்டமணி. வயர் அறுந்து போன போனில் இருந்து அமைச்சருக்கு பேசுவார். அதோடு பெரிய பில்டப்பும் தன்னைப்பற்றி கொடுப்பார்.

 ஆனால் கடைசியில் இந்த வயர் அறுந்து போயி ரெண்டு நாளாச்சு என்று போன்காரர் சொல்வார். அப்போது சற்று தடுமாறிப்போகும் கவுண்டமணி. அவர்களை சுற்றும் முற்றும் பார்த்து சிரித்தபடி அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்மப்பா என்று சொல்லி சமாளிப்பார். இதுவும் அந்த சமயத்தில் பெரிய அளவில் ஒர்க் அவுட்டான காமெடிதான்.

இந்நிலையில், வடிவேலுவின் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் பெயரில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் சமீபத்தில் நடித்திருந்தார்.

அவரைத் தொடர்ந்து இப்போது கவுண்டமணி பேசி நடித்த, அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்மப்பா என்ற வசனத்தை சற்று மாற்றி அரசியல்ல இதெல்லாம் சகஜம்மப்பா என்று டைட்டிலாக்கி இப்போது ஒரு படம் தயாராகிக்கொண்டிருக்கிறது.

காமெடியன்கள் பேசிய வசனத்தை வைத்தால் படம் ஹிட்டடித்து விடுகிறது என்பதால், இந்த படமும் வெற்றி பெறும் என்று கோடம்பாக்கத்தில் ஒரே டிஸ்கஷன் தான்......

0 comments:

Post a Comment