Thursday, 6 February 2014

Leave a Comment

பிரியாமணியின் பாலிவுட் ஆசையில் ஐஸ் கணவருக்கு டுவிட்டர் தூது...




பாலிவுட் ஆசையில் அங்குள்ள டாப் ஹீரோக்களை தொடர்ச்சியாக தொடர்பு கொண்டு வருகிறார் பிரியாமணி. தென்னிந்திய நடிகைகள் பாலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் பிரியாமணிக்கும் அந்த ஆசை தொற்றிக்கொண்டது.

தூதுவிட்ட மயமாக இருந்தவருக்கு சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்குடன் குத்தாட்டம் ஆடும் வாய்ப்பு வந்தது. அத்துடன் பாலிவுட் அவரை மறந்துவிட்டபோதிலும் நான் நடிக்க தயாராத்தான் இருக்கிறேன் என்று ஞாபகப்படுத்தும் விதமாக பாலிவுட் ஹீரோக்களை தொடர்பு கொண்ட வண்ணம் இருக்கிறார்.

இந்தியில் தொடர்ச்சியாக நடித்து வரும் ஸ்ருதியுடன் நெருங்கிப் பழகுவதுடன் தனது பாலிவுட் ஆசையை அவரிடம் வெளிப்படுத்தி உள்ளார். சமீபத்தில் ஷூட்டிங்கின்போது விபத்தில் காயம் அடைந்த ஷாருக்கானிடம் அவ்வப்போது தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.

 அபிஷேக் பச்சனுக்கு நேற்று 38வது பிறந்த நாள். அதற்கு வாழ்த்து சொல்லி பாலிவுட் ஆசையில் டுவிட்டர்  மெசேஜ் அனுப்பி உள்ளார். ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய ராவண் இந்தி படத்தில் அபிஷேக் பச்சனுக்கு தங்கையாக நடித்திருந்தார் பிரியாமணி.

அப்படத்தை நினைவூட்டும் வகையில் அதில் அபிஷேக் ஏற்று நடித்த பீரா என்ற கதாபாத்திரத்தின் பெயரை குறிப்பிட்டு டுவிட்டரில் வாழ்த்து மெசேஜ் போட்டிருக்கிறார்.

 இதற்கிடையில் மும்பை ஸ்டார் ஓட்டலில் அபிஷேக் பச்சனுக்கு நேற்று சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுத்து அசத்தினார் மனைவி ஐஸ்வர்யா ராய். அபிஷேக்கின் நண்பர்களான ஷாருக் உள்ளிட்ட சிலரையும் விருந்துக்கு அழைத்திருந்தார்.

0 comments:

Post a Comment