விசேஷ ஆற்றல்கள் படைத்த பெண்களின் மூளை..!
அதாவது, ஆணின் மூளையில் இருந்து பெண்ணின் மூளை வேறுபட்டு உள்ளது என்பது பல்வேறு எம்ஆர்ஐ ஸ்கேன்களின் ஆய்வு மூலமாக வெளி உலகுக்கு தெரிய வந்துள்ளது.
அதாவது, மூளையின் முன் பகுதியில் இருந்து பின் பகுதியை இணைக்கும் நரம்புகளை அதிகமாகவும், பலமாகவும் கொண்டதாக ஆண்களின் மூளை உள்ளது. அதே சமயம், பெண்களின் மூளையில் வலது மூளையில் இருந்து இடது புற மூளையை இணைத்த வகையில் நரம்புகள் பின்னப்பட்டு உள்ளன. இவையே, ஒரு வேலையை ஆண் செய்யும் விதத்துக்கும், பெண் செய்யும் விதத்துக்கும் உள்ள வித்தியாசம் என்கிறது மருத்துவம்.
அதாவது, ஒரு வேலையை எடுத்து செய்யும் போதும், அதில் முழு கவனம் செலுத்தும் போதும் ஆண்களின் மூளை சிறப்பாகவே செயல்படுகிறது. ஆனால், ஒரே சமயத்தில் இரு வேறு வேலைகளை அவர்களால் திறம்பட செய்ய முடியாது. அதே சமயம், பெண்களால் ஒரு வேளையை மிகவும் திறமையாகவும், ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட வேலைகளை எளிதாகவும் செய்ய முடியும். பொதுவாக பெண்கள் போனில் பேசிக் கொண்டே சமைப்பது, டிவி பார்ப்பது, வீட்டு வேலைகள் செய்வது போன்றவற்றை செய்வதை பார்த்திருப்போம்.
இது மட்டும் அல்ல வீட்டு நிர்வாகத்தையும் கவனித்துக் கொண்டு பணிக்கும் செல்லும் ஆற்றல் பெண்களுக்கு அதிகம் உள்ளது.
மூளை வேறுபாட்டினால் உள்ள சில இயல்பான குண நலன்களை பார்த்தால், வரைபடத்தைப் பார்த்தே ஒரு ஆணால், செல்லுமிடத்தை கண்டுபிடிக்க முடியும். ஆனால், அதற்கெல்லாம் நேரத்தை செலவிடாமல், மற்றவர்களிடம் முகவரி கேட்டு அதை புரிந்து செல்லும் குணம் பெண்களுக்கு இருக்கும்.
வெகு நாட்களுக்கு முன்பு சந்தித்த ஒருவரை நினைவு படுத்தும் ஆற்றல் ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக இருப்பதாகவும், ஒரு வாகனத்தை மிகக் குறைந்த இட வசதி இருக்கும் இடத்திலும் லாவகமாக நிறுத்தும் முறை பெண்களுக்கு எளிதானது என்றும் கூறப்படுகிறது.
ஆனால், இந்த மூளையில் இருக்கும் வேறுபாடு பிறக்கும் போது அமைவதில்லை. சுமார் 15 வயதுக்கு மேல்தான் இந்த வேறுபாடு ஏற்படுவதாகவும், இளம் வயதை அடையும் ஆண் மற்றும் பெண்ணின் மூளையில் இந்த வேறுபாட்டை எளிதாக காணலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதே காரணத்தால் தான், 3 வயது ஆண் குழந்தையை விட, பெண் குழந்தைகள் எளிதாக பல வார்த்தைகளை பேசுவதற்கும் காரணம் என்று தோன்றுகிறது.
0 comments:
Post a Comment