சமீபமாக நடைபெற்ற ஸ்னேகாவின் காதலர்கள் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான கேயார் சுமார் 750 படங்களுக்கும் மேலான திரைப்படங்கள் சேட்டிலைட் சேனல்களால் வாங்கப்படாமல் சும்மா கிடப்பதாகவும், இதனால் தயாரிப்பாளர்கள் நஷ்டத்தைச் சந்தித்திருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
ஒரு சில வாரங்களுக்கு முன்னர் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே கோலி சோடா திரைப்படம் மட்டுமே வெற்றிப்படமென்றும் மற்றவை எல்லாம் தோல்விப்படங்களே என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த ஆண்டு விஜயின் ஜில்லா மற்றும் அஜித்தின் வீரம் ஆகிய திரைப்படங்கள் வெளியானதால் அவர் மறைமுகமா அந்தப் படங்கள் படு தோல்வியைத் தழுவியதாகவும், ஆனால் போலியான பாக்ஸ் ஆபீஸ் விபரங்களை அனைவரும் வெளியிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
இதனையடுத்து தற்பொழுது அவர் பிரபல நடிகர்களைப் பற்றியும் பரபரப்பாகப் பேசியுள்ளார். ட்ரெயின் டிக்கட் கூட புக் செய்யத் தெரியாத பிரபல
ஹீரோக்கள் தங்களின் படங்களின் பாக்ஸ் ஆபீஸ் விபரங்களைச் சொல்லி அதிகச் சம்பளம் கேட்பதாகவும் கூறியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் திரைப்படங்கள் திரையரங்களில் சரியாக ஓடாவிட்டாலும் சாட்டிலைட் சேனல்களுக்கு விற்பதன் மூலம் வருமானம் கிடைக்கும் என்று தயாரிப்பாளர்கள் நினைப்பதாகவும், ஆனால் சுமார் 750 ற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் டிவி சேனல்களால் வாங்கப்படாமல் கிடப்பது பற்றி அவர்களுக்குச் சரியான விழிப்புணர்ச்சி இருப்பதில்லை என்றும் கூறியுள்ளார்.
சென்ற முறை பிரபல நடிகர்கள் நடித்த திரைப்படங்களைப் பற்றிக் கூறிய கேயார் இந்த முறை நடிகர்களையே குறை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment