Tuesday, 25 February 2014

Leave a Comment

பிப்ரவரி 28ல் 12 படங்கள் ரிலீஸ்!



படம் எடுக்கணும், கோடம்பாக்கத்தில் கால் பதிக்கணும்'னு கண்கள் முழுக்கக் கனவுகளோடு வலம் வருகிறார்கள் பல இளைஞர்கள்.

படம் எடுப்பதற்கு முன் படுகிற அதே அவஸ்தையை, வலியை படம் ரிலீஸ் பண்ணுவதற்காகவும் அனுபவிக்க வேண்டியிருப்பதுதான் வேதனை.

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிந்து ரிலீஸுக்குத் தயாராக பல தமிழ்ப் படங்கள் காத்துக்கொண்டு இருக்கின்றன.

போதுமான தியேட்டர்கள் கிடைக்கும் பட்சத்தில் பல படங்களும் ஒரே மாதத்திலேயே வெளியாவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

சிறு பட்ஜெட் படங்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்ற நோக்கத்தில் தயாரிப்பாளர் சங்கம் புது முடிவை அறிவித்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை மட்டும் பெரிய பட்ஜெட் படங்கள்,

பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் ரிலீஸ் ஆக வேண்டும்,

 மற்ற வெள்ளிக்கிழமைகளில் சிறு பட்ஜெட் படங்கள் வெளியாக வேண்டும் என்பதுதான் அந்தப் புது முடிவு.

டப்பிங் படங்கள் மட்டும் இந்த வரைமுறைக்குள் வராது.

இந்த புதிய கட்டுப்பாட்டால் வரும் 28ந் தேதி வெள்ளிக்கிழமையில்  12 படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

இந்த படங்களில் 'வல்லினம்', 'தெகிடி' மட்டுமே மீடியம் பட்ஜெட் படங்கள்.

அதைத்தவிர

 'பனிவிழும் மலர்வனம்',

 'அமரா',

 'அங்குசம்',

 'காதல் சொல்ல ஆசை',

 'வங்கங்கரை' 

ஆகியவை சிறு பட்ஜெட் படங்கள்.  

'வெற்றி மாறன்' (மலையாளம்),

 'நான் ஸ்டாப்',

 'பறக்கும் கல்லறை மனிதன்',

 'ஆக்ஷன் கிட்ஸ்' (ஆங்கிலம்)

 'கரன்சி ராஜா' (தெலுங்கு)

 ஆகிய படங்களும் ரிலீஸ் ஆகின்றன.

தமிழ்நாட்டில் சுமார் 1200 தியேட்டர்கள் உள்ளன.

 இவற்றில் ரிலீஸ் படங்களை திரையிடும் தியேட்டர்கள் சுமார் 800.

இதில் 'வல்லினம்' மட்டும் 400 தியேட்டர்களில் ரிலீசாகிறது.

இதுபோக மீதமுள்ள 400 தியேட்டர்களைத்தான் மற்ற படங்கள் திரையிடப்படுகிறது.

0 comments:

Post a Comment