Wednesday, 19 February 2014

Leave a Comment

11ஆம் வகுப்பு படிக்கும்போது சூர்யாவின் ’காக்க காக்க’ படம் ரிலீஸ் ஆனது- சமந்தா...!



லிங்குசாமி இயக்கும் 'அஞ்சான்' படத்தில் சூர்யாவும், சமந்தாவும் நடித்துக்கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் சமந்தா சூர்யா குறித்து சில சுவாரஸ்யமான சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

'' நான் 11ஆம் வகுப்பு படிக்கும்போது சூர்யாவின் ’காக்க காக்க’ படம் ரிலீஸ் ஆனது. அப்போதெல்லாம் நான் சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை. அதனால் முதல் நாள் முதல் காட்சியே பார்த்துவிடுவேன்.

ஆனால், அதற்குப் பிறகு நான் கொஞ்சம் மாறிவிட்டேன். அதற்குப் பிறகு நான் என் தோழிகளுடன் சேர்ந்து விஜய் மற்றும் விக்ரம் படங்களை விரும்பிப் பார்த்தேன்.

சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.காம் படித்துக்கொண்டிருந்த தருணம் அது. அப்போது எங்கள் கல்லூரி விழாவுக்கு சூர்யா வந்தார்.நான் என்னுடைய தோழிகளுடன் விழா மேடைக்கு விரைந்தேன்.

சூர்யா மேடையில் பேசும்போது பயங்கரமாக கத்திக்கொண்டே சூர்யாவைப் பேசவிடாமல் கிண்டலாக கமெண்ட் அடித்து ரகளை செய்தேன்.ஆனால், இப்போது சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துக்கொண்டு இருக்கிறேன்.

இதை நினைக்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது.'' என்றார் சமந்தா.

0 comments:

Post a Comment