Saturday, 22 February 2014

Leave a Comment

ஆண்ட்ராய்ட் ஆப்ஸ்-ஸில் ஆபத்து - 10 மில்லியனை எட்டிவிட்டது..!


இதுநாள் வரை டெஸ்க்டாப்,லேப்டாப்,டேப்லட்,ஸ்மார்ட்போன், என்று குறிப்பிட்ட வரையறைக்குள் மட்டுமே அடைந்திருந்தன. இனி அவற்றை உடலில் அணிகின்ற பொருட்களிலும் அக்சஸ் செய்ய ஆப்ஸ் என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்பட்ட அப்ளிகேஷன் சாப்ட்வேர்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது “Apps In Wearables” என்னும் புது ட்ரெண்டை நோக்கி அனைத்து நிறுவனங்களும் இயங்க ஆரம்பித்துவிட்டன.

இதற்கு பிள்ளையார்சுழி போடும் விதமாக ஸ்மார்ட் வாட்சினை சோனி நிறுவனம் முதன் முதலாக அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து சாம்சங் நிறுவனம் கேலக்ஸி கியர் வாட்சையும், கூகிள் நிறுவனம் கூகிள் கிளாஸ் என அணிகின்ற மாதிரியான சாதனங்களையும் உற்பத்தி செய்துள்ளன. இப்போது இண்டெல் நிறுவனமும் அணிகிற மாதிரியான அப்ளிகேஷனை உருவாக்குவது பற்றி யோசித்து வருகிறது. இப்படி எல்லா நிறுவனங்களுமே அணிகிற மாதிரியான ஆப்ஸை தயாரிக்க ஆரம்பித்துள்ள நிலையில் இப்போது பரவலாக மக்களால் கையாளப்படும் ஆண்ட்ராய்ட் ஆப்களில் பெரும்பாலானவை ஊறு விளைவிப்பவை என்று தெரியவந்துள்ளது.

2014 ஜனவரியில் காஸ்பர்ஸ்கை லேப் எனும் ஆண்டிவைரஸ் மென்பொருள் நிறுவனம் ஆய்வு செய்ததில் சுமார் 2 லட்சம் மொபைல் மால்வார்களை அது கண்டறிந்தது. அதற்கு இரு மாதங்களுக்கு முன்னர் நவ.2013 ஐ விட 34% அதிகரித்துள்ளது இந்த எண்ணிக்கை. அப்போது 1,48,000 மால்வேர்கள் இருந்தது தெரியவந்தது.

இப்போதெல்லாம் இணையவழி மோசடிக்காரர்கள் மொபைல் மார்க்கெட்டைக் குறிவைத்து இயங்குவதாக காஸ்பர்ஸ்கை தெரிவித்துள்ளது. இந்த வகையில் சந்தேகத்துக்கு இடமான ஊறு விளைவிக்கக் கூடிய ஆண்ட்ராய்ட் ஆப்ஸ் தற்போது 10 மில்லியன் என்ற அளவைத் தொட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து,பொதுவாக எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பாக இருந்தாலும், அதற்கு எதிர்மறைப் பலன்கள் உண்டு என்பதை மறுப்பதற்கு இயலாது. பல்வேறு நிலைகளில் அதனுடைய பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது. விலையுயர்ந்த கம்ப்யூட்டராக இருப்பினும் அதற்கு ஒரு ஆண்ட்டி வைரஸ் மென்பொருள் (Anti virus software)கட்டாயம் தேவைப்படுகிறது. இல்லையென்றால் என்ன விலை கொடுத்து வாங்கியிருந்தாலும் அதிலுள்ள கோப்புகளை நச்சு நிரல்கள் துவம்சம் செய்துவிடுகின்றன.

அதேபோன்றதொரு நிலைதான் தற்பொழுது பிரபலமாகிக்கொண்டிருக்கும் ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் நீடிக்கிறது என்பது கசப்பான உண்மை. விலையுயர்ந்த ஆண்ட்ராய்ட் மொபைல்களாக இருப்பினும் சரி.. விலையுயர்ந்த டேப்ளட் பி.சி. க்களாக இருப்பினும் சரி (Tablet pc, android tablet), எதுவாக இருப்பினும் வைரஸ் பாதிப்பு என்பது பொதுவானதே.

ஆயினும் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் டேப்ளட் பி.சி. மற்றும் மொபைல் போன்களை பயன்படுத்துவோர் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த வைரஸ் ஆனது ஆண்ட்ராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் பதிப்பிற்கு முந்தைய பதிப்புகளைப் பயன்படுத்தும் சாதனங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனை உறுதி செய்யும் முகமாகவே computer emergency response teamindia வின் அறிக்கை அமைந்துள்ளது என்றும் இதையடுத்தே இந்தியாவில் ஆண்ட்ராய்ட் சாதனங்களில் அதிகளவு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

0 comments:

Post a Comment