எய்ட்ஸ் நோயை அறியும் விழிப்புணர்வு நோக்குடன் பபிலோ ஹாப்பி ஹை என்ற இந்திப்படம் எடுக்கபட்டு வருகிறது.இது குறித்து இந்த படத்தின் இயக்குனர் நிலா மத்ஹாப் பண்டா கூறும் போது இந்தப்படம் எய்ஸ்ட் நோய் குறித்து பற்றி விரிவாக விளக்கும்.
3 நண்பர்கள் ஜதின், ஹரி மற்றும் ரோஹன் இவர்கள் ஜதின் திருமணத்திற்காக சாலைபயணம் பேற்கொள்கிறார்கள். அபோது ஜதின் ஒரு பெண்ணை சந்திக்கிறர் அவருடன் ஒருநாள் இரவுப்பொழுதை கழிக்கிறார்.
இந்தப்படம் எய்ட்ஸ் நோயின் தீவிரம் குறித்து விளக்குகிறது. இந்த பிரச்சினை மிகவும் மறைவாக உள்ளது இதை சுற்றி நகைச்சுவை பாடல்கள் மற்றும் நடனம் என சிறப்பாக கொண்டு செல்கிறோம்.இந்த மறைவான விவரங்களை நான் மிகவும் நாகரீகமாகவும் நகைச்சுவையாகவும் கூறி உள்ளேன், இவ்வாறு அவர் கூறினார்.
டிரைலர் இளமை காதலை எடுத்துகாட்டும் வகையில் இருக்கும் என்றும் ஆனால் உண்மையான விஷயத்தை கூறும் வகையில் இருக்காது என்றும் இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

0 comments:
Post a Comment