கரகாட்டக்காரியாக நடிப்பதால் ஸ்ரேயாவுக்கு கரகாட்டம் கற்க கண்டிஷன் போட்டுள்ளார் பாலா. நவநாகரீக பெண்ணாகவே நடித்து வந்த ஸ்ரேயாவை கோலிவுட் தற்போது முற்றிலுமாக கைவிட்டுவிட்டது.
கடைசியாக ரவுத்திரம் படத்தில் நடித்தார். இப்படம் 2 வருடத்துக்கு முன் திரைக்கு வந்தது. தற்போது இவருக்கு பாலா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. பரதேசி படத்தையடுத்து கரகாட்டத்தை மையமாக வைத்து பாலா இயக்கும் புதிய படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்கிறார்.
இதில் கரகாட்டம் ஆடும் பெண்ணாக இதுவரை ஏற்காத வேடத்தில் ஸ்ரேயா நடிக்க உள்ளார். கரகாட்டத்தின் பின்னணியில் கதை அமைக்கப்பட்டுள்ளதால் அதன் பாரம்பரியம்பற்றிய விவரங்களை பாலா சேகரித்திருக்கிறார்.
கரகாட்டம் முழுமையாக தெரிந்த பிறகே ஷூட்டிங்கிற்கு வரவேண்டும் என ஸ்ரேயாவுக்கு கண்டிஷன் போட்டிருக்கிறார் பாலா. இதனால் கரகாட்டம் பயிற்சியில் விரைவில் ஈடுபடுகிறார் ஸ்ரேயா.
இளையராஜா இசை அமைக்கிறார். தொடர்ச்சியாக 6 நாட்களில் 12 பாடல்களை இப்படத்துக்கு பதிவு செய்து அசத்தி இருக்கிறார். கரகாட்ட பாரம்பரிய இசைக்கலைஞர்களை இதில் இளையராஜா பயன்படுத்தியுள்ளார்.

0 comments:
Post a Comment