பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் நெக்ஸ்ட் பிக் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் குக்கூ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இயக்குனர் லிங்குசாமியின் உதவி இயக்குனரும், ஆனந்த விகடனில் வெளியாகிவந்த பிரபலத் தொடரான வட்டியும் முதலும் தொடரின் ஆசிரியருமான ராஜு முருகன் இத்திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
அட்டக்கத்தி தினேஷ் மற்றும் மாளவிகா ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தின் பஃர்ஸ்ட் லுக் பெரும் எதிர்பார்ப்பினைக் கிளப்பியிருக்கிறது.
மேலும் இப்படத்தின் போஸ்டர்கள் கவித்துவமாக அமைந்திருப்பதாகவும் பாராட்டப்படுகிறது. சந்தோஷ் நாராயணனின் இசையும் பெருமளவில்
பாராட்டப்படுகிறது.
பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment