தமிழ் சினிமாவில் இன்றைய சூழ்நிலையில் கொடிகட்டி பறக்கும் ஹீரோக்களில் விஜய் சேதுபதியும் ஒருவர்.
வசந்த குமரன், மெல்லிசை, இடம் பொருள் ஏவல், புறம்போக்கு என தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்துக்கொண்டு நடித்து வருகிறார்.
இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்புடன் சேர்த்து, படத்தயாரிப்பிலும் களமிறங்கியுள்ளாராம்.
அவர் முதலில் ‘சங்குதேவன்’ என்ற படத்தை தயாரிப்பதாக இருந்தார். ஆனால் ஏதோ சில காரணங்களால் அப்படத்தை கைவிடப்பட்டு, ’ஆரஞ்சு மிட்டாய்’ என்ற படத்தை தயாரித்து நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார். இப்போது அதற்கான வேலைகளில் படு பிசியாகி இயங்கி வருகிறார் விஜய் சேதுபதி.
இந்தப்படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா... பிரபல இயக்குனர் பிஜு விஸ்வநாத்தாம்.
இவர், ஆங்கிலம், இந்தி, மலையாளம், ஜப்பான், ஸ்பானிஷ் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களை இயக்கி, உலக அளவில் பல விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகப் புகழ்பெற்று விளங்கும் இயக்குனரான பிஜு விஸ்வநாத்துடன், விஜய் சேதுபதி இணைந்திருப்பதை பார்க்கும்போது ‘ஆரஞ்ச் மிட்டாய்’ படத்தை உலக அளவில் கொண்டு செல்ல திட்டமிட்டு, எடுக்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது!

0 comments:
Post a Comment