அசின் காருக்குள் இருப்பது போன்ற சர்ச்சை படமொன்று சமீபத்தில் இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தற்போது போலியான படம் என்று தெரியவந்துள்ளது. வேறு படத்தை அசின் என தவறுதலாக வெளியிட்டு உள்ளனர்.
அசினின் ஊடகம் புகைப்பட பொறுப்பாளர் இதுகுறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில் அசின் பற்றி வெளியான செய்தியும், படமும் உண்மையானவை அல்ல. இது அசின் பெயருக்கு களங்கமும், அவதூறும் ஏற்படுத்தும் செயல் ஆகும். செய்தி முற்றிலும் தவறானது. போட்டோவும் போலியானது என்று தெரிவித்து உள்ளார்.
மேலும் அவர் கூறும்போது. அசினை மிரண்டா குளிர்பான நிறுவனம் பத்து வருடத்துக்கு விளம்பர தூதுவராக நியமித்துள்ளது. இதில் எட்டு வருடங்கள் முடிந்துள்ளது. மேலும் இரு வருடங்கள் உள்ளன. பத்து வருடங்கள் தொடர்ந்து அசினை விளம்பர தூதவராக நியமித்து இருப்பது சாதனையாகும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
அசின் கூறும்போது, மிரண்டா விளம்பர படத்தில் நடித்தது இனிமையான அனுபவம். புது விளம்பரமாகவும் இருந்தது. ரசிகர்கள் இதனை ரசிப்பார்கள் என்றார். இதுபோல் அமெரிக்க அழகு பொருட்கள் தயாரிக்கும் ஏவோன் நிறுவனமும், அசினை விளம்பர தூதுவராக நியமித்து உள்ளது.
இதற்கான நிகழ்ச்சியில் அசின் பங்கேற்று பேசும்போது படத்தின் கதையையே முக்கியமாக பார்க்கிறேன். சிறந்த கதைகளாக இருந்தால் யாருடன் வேண்டுமாலும் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன் என்றார்.

0 comments:
Post a Comment