Monday, 3 February 2014

Leave a Comment

நயன்தாரா, திரிஷா - திடீர் சந்திப்பு?




நயன்தாராவும், திரிஷாவும் தமிழ் திரையுலகில் மூத்த நடிகைகளாக உள்ளனர். திரிஷா 2002–ல் கதாநாயகியாக அறிமுகமானார். பத்து வருடங்களுக்குமேல் தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

 நயன்தாராவும் 2003–ம் ஆண்டில் இருந்து தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

புது நடிகைகள் வரத்து இவர்கள் மார்க்கெட்டை சரிக்கவில்லை. இன்னும் முன்னணி நடிகைகளாகவே உள்ளனர்.

 போட்டி மனப்பான்மையின்றி இருவரும் நெருங்கிய தோழிகளாகவும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று இருவரும் சந்தித்து பேசினார்கள். அப்போது விருந்தும் நடந்தது.

இதுகுறித்து டுவிட்டரில் திரிஷா கூறும்போது, நேற்றைய இரவு மகிழ்ச்சியாக கழிந்தது.

 தோழிகள் ஒன்றாக சேர்ந்து இருக்கும் சந்தோஷம் மாதிரி வேறு எதுவும் இல்லை என்று குறிப்பிட்டு உள்ளார்.

0 comments:

Post a Comment