முக்தா என்டர்டெயின்ட் பிரைவேட் லிட் நிறுவனம் சார்பாக முக்தா சீனிவாசனின் மகன் முக்தா ஆர்.கோவிந்த், புன்னகை பூ கீதாவின் எஸ்.ஜி. பிலிம்ஸ் பிரைவேட் லிட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘சிவப்பு’. இப்படத்தை சத்ய சிவா என்பவர் இயக்குகிறார். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார். மது அம்பாட் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.
இப்படத்தில், நவீன்சந்திரா கதாநாயகனாகவும், ரூபா மஞ்சரி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் ராஜ்கிரண், தம்பி ராமையா, சோனா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
இப்படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் முக்தா சீனிவாசன், கேயார், சிவா, நடிகர்கள் சிவகுமார், சரத்குமார், ராஜ்கிரண் இயக்குனர்கள் சமுத்திரக்கனி, ஜீவா சங்கர், ஜே.எஸ்.நந்தினி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டது. டிரைலரின் இறுதியில் ராஜ்கிரண் பேசும் வசனமான இலங்கை தமிழர்களுக்கு எல்லோரும் இணைந்து ஆதரவு கொடுப்போம், இல்லையென்றால், விட்டுவிடுவோம். அதை விடுத்து அவர்களை வைத்து அரசியல் செய்யவேண்டாம் என்ற வசனம் அனைவரையும் சிந்திக்க வைத்தது.
இவ்விழாவில், முதலில் பேசிய சரத்குமார், இயக்குனரை கண்டிப்பாக பாராட்டியே தீரவேண்டும். மிகவும் துணிச்சலோடு இப்படத்தை இயக்கியிருக்கிறார் என்று நம்புகிறேன். இதற்கு டிரைலரில் ராஜ்கிரண் பேசும் வசனம் உண்மையிலேயே சிந்திக்க வேண்டியது. இன்றைய காலக்கட்டத்தில் நடக்கக்கூடியது இதுதான். இதிலிருந்து இந்த படம் ஒரு சிறந்த படமாக இருக்கும் என்று நம்பிக்கை ஏற்படுகிறது என்று பேசினார்.
இப்படத்திற்கு சினேகன், கபிலன் வைரமுத்து ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். சினேகன் பேசும்போது, நல்ல கதைக்களம் கொண்ட இந்த படத்திற்கு பாடல் எழுத வைத்ததற்கு தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் பாடல்கள் எதார்த்தனமான காட்சிகளை வைத்து படமாக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களின் வாழ்க்கையில் சொல்லக்கூடிய படமாகவும் இப்படம் அமைந்துள்ளது. இம்மாதிரியான படங்களை இயக்குனர்கள் எங்களிடம் கொண்டுவந்தால் இலவசமாகக்கூட பாடல்கள் எழுத தயாராக இருக்கிறோம் என்று பேசினார்.

0 comments:
Post a Comment