மைனா கொடுத்த உற்சாக வெற்றியில் ஒரு சுற்றுப் பெருத்துப் போன அமலாபால் இப்போது பட வாய்ப்புகள் இல்லாததால் சோகத்தில் இருக்கிறார்.
பழம் நழுவி பாலில் விழுவதைப் போல எல்லாப் பட வாய்ப்புகளும் தன்னைத் தேடி வரும் என்று எதிர்பார்த்த அமலாபாலுக்கு தமிழில் நம்பர் 1 நடிகையாக வேண்டும் என்கிற பெருங்கனவை விஜய்யின் ‘தலைவா’ கலையோ கலையென்று கலைத்து விட்டது.
கைவசம் ‘நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி’ ஆகிய ரெண்டு படங்களை மட்டுமே கையில் வைத்திருக்கும் அவர் தலைவாவில் விட்டதை இந்தப் படங்களில் பிடித்து விட வேண்டும் என்கிற ஆசையில் இருக்கிறார்.
இந்நிலையில், மேலும் புதிய பட வாய்ப்புகளுக்காக தனது சம்பளத்தை கணிசமாக குறைத்திருக்கும் அவர் ‘பொல்லாதவன், ஆடுகளம்’ படங்களை அடுத்து தனுஷ் – வெற்றி மாறன், மீண்டும் இணையும் புதிய படத்திலும், கொடுக்கிற சம்பளத்தை மட்டுமே வாங்கிக் கொண்டு நடிக்கிறாராம்.
அதுமட்டுமில்லாமல் விஜய் சாரோட ‘தலைவா’ படத்தை ரொம்பவே நம்பியிருந்தேன். ஆனா அந்தப்படம் என்னோட சினிமா கெரியரையே டேமேஜ் பண்ணிடுச்சு என்று தன்னை பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லி சொல்லி சோகத்தில் புலம்புகிறார் அமலாபால்.
0 comments:
Post a Comment