Tuesday, 25 February 2014

Leave a Comment

ஓட்டுப்போடவே நூறு முறை யோசிக்கிற ஆளு நானு…. ஏம்பா என்னைய கோத்துவிடறிங்க...!



டைரக்டர் சேரன் தொடர்ந்து சில தினங்களாக தனது பேஸ்புக் பக்கத்தில் தமிழக முதல்வரை பாராட்டி எழுதி வருவதால் அவர் விரைவில் அ.தி.மு.க வில் சேரப்போகிறார் என்று செய்திகள் வெளியாகின.

குறிப்பாக சென்னையில் அம்மா தியேட்டர்கள் திறக்கப்படும் என்ற ஜெயலலிதா அரசின் முடிவை வரவேற்று ஒரு பாராட்டு அறிக்கையை கூட வெளியிட்டிருந்தார் சேரன்.

அதனால் அவர் அ.தி.மு.கவில் சேரப்போகிறார் என்று சில ஊடகங்கள் கொழுத்திப் போட்டது. ஆனால் இதில் எந்த உண்மையும் இல்லை என்று அவசரம் அவசரமாக விளக்கம் தந்திருக்கிறார் டைரக்டர் சேரன்.

இதுபற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது :

ஹாஹாஹா….. நான் அதிமுக வில் சேரப்போவதாக ஒரு வதந்தி பரவ ஆரம்பித்து என் காதுக்கே வந்தது ஒரு பத்திரிக்கை நிருபர் மூலமாக…

மூன்று நாட்களாக தொடர்ந்து முதல்வரை பாராட்டி என் ஃபேஸ்புக்கில் எழுதுவதாலும் பத்திரிகை செய்தியாக அது மாறுவதாலும் நான் அந்த கட்சியோடு சேரப்போகிறேன் என நினைத்து விட்டார்கள் போல..

அரசாங்கம் மக்களுக்காக… மக்களுக்கான நன்மை கிடைக்கும் திட்டமோ செயலோ அரசாங்கம் செய்யும் போது நடுநிலையாளர்கள் பாராட்ட வேண்டும் அப்போதுதான் தான் செய்யும் செயலுக்கான வரவேற்பு பார்த்து தொடர்ந்து மக்களுக்கு அரசு நிறைய செய்ய முன்வரும். ஒரு வருடத்திற்கு முன் தூக்குதண்டனை என்ற மனித வாழ்வியலுக்கு விரோதமான சட்டத்தையே முழுமையாக அகற்றக்கோரி ஒரு ஆவணப்படம் தயாரித்தேன்.

அதன் வழியில் இன்று அரசாங்கம் 7 பேரை விடுதலை செய்ததோடு அல்லாமல் தமிழ்நாட்டின் தமிழ்மொழியின் மானம் காக்க ஒரு இனத்தின் மீது சுமத்தப்பட்ட பழி அகற்றப்பட முன்னோடியாக செயல்படும் முதல்வரை பாராட்டுவதற்கும், என் தொழில் சில தாதாக்களின் கைகளில் மாறி சிக்கிக்கொண்டு சிலர் மட்டுமே பணம் கொள்ளையாக சம்பாரிக்க நல்ல திரைப்படம் எடுக்க நினைப்பவர்கள் நடுரோட்டில் நிற்கும் நிலை இன்று திரைஉலகில்.

கட்டண உயர்வு காரணமாக மக்கள் படம் பார்க்க வரும் வாய்ப்பு குறைந்து வீட்டில் தொலைக்காட்சி பெட்டியில் திருட்டு விசிடி யில் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த நிலையை அரசின் அம்மா திரையரங்கம் திட்டம் மாற்றி விடவும் மறுபடியும் சினிமாத்தொழில் தழைத்தோங்கவும் வாய்ப்பிருக்கிறது.

இதுவே நான் இந்த இரண்டு நாட்களும் முதல்வர் பற்றி எழுத காரணம். அதுக்காக எனக்கு அதிமுக உறுப்பினர் அட்டை வாங்கி மாட்டிருவிங்கபோல. ஓட்டுப்போடவே நூறு முறை யோசிக்கிற ஆளு நானு…. என்று கூறியிருக்கிறார் சேரன்.

0 comments:

Post a Comment