Monday, 10 February 2014

Leave a Comment

சசிகுமாரை புகழ்ந்த சாக்ரடீஸ்...!



நடிகர் கமலின் உதவியாளர் சாக்ரடீஸ் இயக்கும் புதிய படம் ‘பிரம்மன்’. இப்படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், கன்னட நடிகர் சுதீப், சந்தானம், லாவண்யா திரிபாதி, நவீன் சந்திரா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்நிலையில் இப்படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடந்தது. இதில் நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் இயக்குனர் பேசும்போது,

இப்படம் உருவாக முதற்காரணம் நடிகர் சசிகுமார்தான். அவர் ஏற்கெனவே 2 புதிய இயக்குனர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அதேபோல் என்னையும் இப்படத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். அவருக்காக கதையை தயார் செய்து வைத்துவிட்டு அவரிடம் கதை சொல்வதற்காக ரொம்பவும் சிரமப்பட்டேன். அவரை சந்திக்கவே முடியவில்லை. இப்படத்தின் பிரம்மா சசிகுமார்தான் என்றால் அது மிகையல்ல என்று பேசினார்.

சசிகுமார் பேசும்போது, இயக்குனர் என்னை சந்திக்க ரொம்பவும் சிரமப்பட்டேன் என்று கூறினார். நான் ஒரு இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர். அப்படியிருக்கும்போது, நான் ஒரு படம் பண்ணிக் கொண்டிருக்கும்போது அடுத்தப் படத்துக்கான கதையை கேட்பதில்லை.

அடுத்தப் படம் பண்ணுவதற்கு நேரம் கிடைத்த பிறகுதான் கதையை கேட்க முன்வருவேன். ஏனென்றால், நான் படைப்பாளிகளை எப்பொழுதும் காக்க வைக்க விரும்புவதில்லை. இயக்குனர் என்ற வகையில் எனக்கும் படைப்பாளிகளின் வலி தெரியும் என்று பேசினார்.

இப்படத்தில் சசிகுமார் முழுக்க முழுக்க மாடர்ன் இளைஞனாக வருகிறார். இப்படத்திற்காக 2 பாடல்களை வெளிநாடுகளில் படமாக்கியுள்ளனர். தாமரை, நா.முத்துக்குமார் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

கே.மஞ்சு என்பவர் தயாரித்துள்ளார். இவர் கன்னடத்தில் 38 படங்களுக்கு மேல் தயாரித்துள்ளார். தமிழில் முதன்முறையாக இப்படத்தை தயாரிக்கிறார்.

0 comments:

Post a Comment