Monday, 10 February 2014

Leave a Comment

யுவனின் மத மாற்றத்திற்கு காரணம் - மூன்றெழுத்து ‘முஸ்லீம்’ டைரக்டராம்...


தமிழ்சினிமாவில் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன்ஷங்கர் ராஜா இஸ்லாமிய மதத்துக்கு மாறி விட்டார் என்பது தான் கடந்த ரெண்டு வார காலமாக கோலிவுட்டில் பரபரப்பை பற்ற வைக்கும் செய்தி.

அது மட்டுமில்லாமல் ஏற்கனவே இரண்டு பெண்களை திருமணம் செய்து விட்டு அந்த வேகத்திலேயே விவாகரத்தும் செய்த யுவன் மூன்றாவதாக ஒரு பெண்ணை ரகசிய திருமணம் செய்து கொண்டார் என்றும் சொல்லப்பட்டது.

ஆனால் யுவனோ நான் முஸ்லிம் மதத்துக்கு மாறியது உண்மை தான். ஆனா மூன்றாவது திருமணம் எல்லாம் செய்யவில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று விளக்கமளித்திருந்தார். என் முடிவுக்கு என்னுடைய குடும்பம் முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும், எனது அப்பா இளையராஜாவுக்கும் எனக்கு எந்த கருத்து வேறுபாடு இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

அது எல்லாம் சரிதான்.

திடீரென்று யுவன் இஸ்லாம் மதத்துக்கு காரணம் என்ன?, அவரை அந்தளவுக்கு மாற்றிய அந்த பிரபலம் யார்? என்பது தான் எல்லோருடைய மனசைக் குடையும் கேள்வியாக தொக்கி நிற்கிறது. இதைப்பற்றி விசாரித்த போது பல உண்மைத் தகவல்கள் நமக்கு கிடைத்தன. அதை உங்களுக்காக தருகிறோம்.

தொடர்ந்து இரண்டு பெண்களுடன் விவாகரத்து ஏற்பட்டு அதனால் மனமுடைந்திருந்த யுவனுக்கு அடுத்த அடியாக வந்து விழுந்தது தான் அவரது அம்மாவின் மரணம். வீட்டில் ரொம்பவே அம்மாச் செல்லமான யுவனுக்கு அம்மாவின் திடீர் மரணத்தை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

பல நாட்களை தூக்கத்தை தொலைத்து, அம்மாவின் நினைப்பிலேயே இருந்து மனம் நொடிந்து போனவருக்கு யாராவது ஆறுதல் தர வர மாட்டார்களா..? எங்காவது நிம்மதி கிடைக்காதா..? என்று எதிர்பார்ப்போடு காத்திருந்திருக்கிறார்.

அல்ஹம்துலில்லாஹ்! : யுவன்ஷங்கர் ராஜாவை ‘மதம் மாற்றிய’ பிரபலம் யார்?அப்போது தான் யுவனின் நெருங்கிய நண்பரான அந்த மூன்றெழுத்து ‘முஸ்லீம்’ டைரக்டர் அவரை நேரில் சந்திக்க சென்றிருக்கிறார். அங்கே யுவனின் கோலத்தைப் பார்த்து கண் கலங்கிய அவர் தனது மத நூலான குரானை கொடுத்து அதில் ஒரு பக்கத்தை படியுங்கள் என்று கூறியிருக்கிறார்.

யுவனும் அந்த பக்கத்தை படிக்க ஆரம்பித்திருக்கிறார். படித்து முடித்ததும் அவருடைய மனம் லேசாகியிருக்கிறது. அது மட்டுமில்லாமல் குரானை தனது வீட்டுக்கு எடுத்துச் சென்ற அவர் தொடர்ந்து வாசித்திருக்கிறார், தான் தேடிப்போன மன நிம்மதியும், அமைதியும் அதில் இருப்பதாக உணர்ந்திருக்கிறார். அந்த வேகத்தில் தான் இஸ்லாமிய மதத்துக்கு மாற முடிவெடுத்திருக்கிறார் யுவன்.

இந்த விஷயத்தை தனது அப்பாவிடமும், குடும்பத்தாரிடமும் சொல்ல, வீட்டில் ஒரு பெரிய பூகம்பப் புயலே விடாமல் அடித்திருக்கிறது. அப்பா இளையராஜா எவ்வளவோ சொல்லியும் தனது மதம் மாறும் விஷயத்தில் பிடிவாதமாக இருந்திருக்கிறார் யுவன். இந்த விவகாரத்தினால் தான் எந்த உடல்நலக்குறைவும் இதுவரை ஏற்படாத இளையராஜாவுக்கு சமீபத்தில் திடீரென்று மைல்ட் அட்டாக் வந்ததாம்.

இருந்தாலும் யுவனின் மனசை மாற்ற முடியாத கார்த்திக் ராஜா, தங்கை பவதாரணி, சித்தப்பா பையன்களான வெங்கட்பிரபு, பிரேம்ஜி ஆகியோர் இளையராஜாவை சமாதானப்படுத்தியிருக்கிறார்கள்.

முதலில் இதை ஏற்க மறுத்த இளையராஜா பிறகு வேறு வழியே இல்லாமல் யுவனின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக யுவனின் ஆசைக்கு வழி விட்டிருக்கிறார்.

0 comments:

Post a Comment