எனக்கு காதல் திருமணத்தில்தான் விருப்பம் என்று ‘ஆஹா கல்யாணம்’ படத்தின் கதாநாயகி வாணி கபூர் சொன்னார். அவர் மேலும் கூறியதாவது: ‘ஆஹா கல்யாணம்’ படத்தில் நடித்தது புது அனுபவம். இந்தப் படம் மூலம் தென்னிந்தியாவுக்கு வந்திருக்கிறேன்.
இதில் நானியுடன் நடித்தது சிறப்பாக இருந்தது. இதற்கு முன் அவர் நடித்துள்ள எந்தப் படத்தையும் பார்த்ததில்லை. என் தோழிகள் சிலர் ‘நான் ஈ’ படம் பற்றி சொல்லியிருக்கிறார்கள். இது இந்திப் படத்தின் ரீமேக். ஒரிஜினலில் அனுஷ்கா சர்மா நடித்திருந்தார். இதில் நான் நடிப்பதால் என்னையும் அவரையும் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள் என்று சொல்கிறார்கள்.
நான் அவரை காப்பி அடித்து நடிக்கவில்லை. அல்லது அவர் சாயல் எதையும் பின்பற்றவில்லை. எனக்கான ஸ்டைலை கொண்டு வருவதற்காக நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். கதையை ஒட்டி சில காட்சிகளில் ஒற்றுமை இருந்தாலும் கண்டிப்பாக என் நடிப்பு வேறுவிதமாகத்தான் இருக்கும்.
இந்த படம் கல்யாணம் பற்றியது. நமது கல்யாண கலாசாரம் பற்றிப் பேசும் படம். அதனால் உங்கள் கல்யாணம் எப்படி என்று கேட்கிறார்கள். காதல் திருமணத்தில்தான் எனக்கு விருப்பம். இருந்தாலும் எனது சகோதரிக்கு நடந்த திருமணம் போல எனக்கும் நடக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
0 comments:
Post a Comment