இங்கிலாந்து நாட்டில் வாழும் 23 வயது பெண் ஒருவருக்கு முகம், மார்பு , மற்றும் பல பகுதிகளில் ஆண்கள் போல முடி முளைத்துள்ளதால் அவருடைய உண்மையான அடையாளமே மாறிவிட்டது.
இதனால் ஆணாகவும் மாறமுடியாமல், பெண்ணாகவும் வாழ முடியாமல் தவித்து வருகிறார் அந்தப் பெண். பெர்க்ஷையர் நகரில் வசித்து வருபவர் கர்னாம் கவுர். 23 வயதான இந்தப் பெண்ணுக்கு பாலிசிஸ்டிக் ஓவர் சின்ட்ரோம் என்ற நோய் அவருடைய 11 வயதில் தாக்கி முகத்தில் முடி முளைக்க தொடங்கிவிட்டது.
அதனால் இவர் பள்ளியில் சக மாணவ மாணவிகளின் கேலிக்கு ஆளானார். இதனால் பள்ளிக்கு செல்வதையே நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தே படிக்க தொடங்கினார்.
இவருடைய முகம் மட்டுமின்றி கை, கால், மார்பு போன்ற உடலின் அனைத்து பகுதிகளிலும் முடி முளைத்ததால் பெரும் அவதிக்குள்ளானார்.
அட போங்கப்பா... வாரத்திற்கு இருமுறை ஷேவிங் செய்து முடிகளை அகற்றுவதிலேயே இவருக்கு பெரும் வேலையாக இருந்தது.
ஆனால் ஒரு கட்டத்தில் இவர் ஷேவிங் செய்வதை நிறுத்திவிட்டார். தாடி, மீசையோடு கடவுள் நமக்கு அளித்த வரம் இது. இதை எதற்காக எதிர்த்து போராட வேண்டும் என முடிவு செய்து சீக்கியர்கள் போல முடியை முழுவதும் வளர்க்க தொடங்கிவிட்டார்.
தற்போது இவருக்கு பெரிய தாடி, மீசை ஆகியவை உள்ளது. இவருடைய பெற்றோர்களும், சகோதரரும் இவருடைய முடிவிற்கு ஆதரவு அளித்தனர்.
பாய் ப்ரண்ட் இல்லையே... ஆனால் இவருக்கு இதுவரை ஒரு பாய்பிரண்ட் கூட கிடைக்கவில்லை என்பதுதான் இவருடைய ஒரே ஏக்கமாம்.
நானும் சராசரி பெண்தான்... சக பெண்களை போலவே தனக்கு செக்ஸ் ஆசை இருப்பதாகவும், ஆனால் என்னை பார்க்கும் ஆண்கள் எல்லோரும் என்னைவிட்டு ஒதுங்கியே போகிறார்கள் என்றும் கவலையுடன் கூறுகிறார்.
0 comments:
Post a Comment