Wednesday, 5 February 2014

Leave a Comment

படப்பிடிப்பில் தான் சிரித்தால் கூட அடிப்பேன் உதைப்பேன் என்று மிரட்டினார்....




படப்பிடிப்பில் தான் சிரித்தால் கூட அடிப்பேன் உதைப்பேன் என்று மிரட்டியதாக இயக்குநரைப் பற்றி படவிழாவில் புதுமுக நடிகர் தன் குமுறலை வெளியிட்டார்.

திரிலோக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் திரிலோக் சுரேந்திரன் பிள்ளை பந்தலம் தமிழில் முதல் முறையாக தயாரித்துள்ள படம் ‘சூறையாடல்.’

இப்படத்தில் நாயகனாக ஸ்ரீபாலாஜி அறிமுகமாகிறார்.இவர். கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றவர். அவருக்கு ஜோடியாக மலையாள வரவான காயத்ரி நடித்துள்ளார். தாமரை கண்ணன் இயக்கியுள்ளார். இவர் 18 ஆண்டுகளாக மலையாளத் திரையுலகில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் ஐ.வி.சசி மற்றும் சாஜன் ஆகியோரிடம் இணை. துணை இயக்குநராக பணியாற்றி இருப்பவர்.

அது மட்டுமல்ல விஜய்டிவியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற மகாராணி. அவள் ஆகிய மெகா ஹிட் தொடர்களின் இயக்குநரும் இவர்தான்..

‘சூறையாடல்’ படத்தின் ஆடியோ பங்ஷன் நேற்று மாலை சென்னையிலுள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. திரிலோக் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திரிலோக் சுரேந்திரன் பிள்ளை பந்தலம் வரவேற்புரையாற்றினார்.

விழாவில் கதாநாயகன் ஸ்ரீபாலாஜி பேசும்போது ”படத்தில் என் கேரக்டர் ஒரு மாதிரியான குழப்பமான மனநிலையில் இருப்பவன். படப்பிடிப்பில் இயக்குநர் நான் சிரித்தால்கூட அடிப்பேன் உதைப்பேன் என்று மிரட்டினார். அந்த அளவுக்கு மூடு மாறாமல் வைத்திருந்தார். என்னை இயக்குநர் படம் முடியும் வரை அந்த அளவுக்கு சீரியசாக மாற்றியிருந்தார்.” என்றார்.

நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது ”ஹீரோ ஸ்ரீபாலாஜி என்னோட தம்பி மாதிரி. அவன் ஜெயிப்பதற்காக பல வருடங்களாக சினிமாவில் போராடிக் கொண்டிருக்கிறான். கூத்துப்பட்டறைக்கு சென்று நடிப்பெல்லாம் கற்றுக்கொண்டு வந்தான். அவனை இந்தப் படத்தில் ஹீரோவாகப் பார்க்கும் போது பெருமையாக உள்ளது. இந்த புதிய படக்குழுவினரை வாழ்த்துகிறேன்”. என்றார்.

ஆடியோவை ‘குசேலன்’ படத்தயாரிப்பாளர் ‘செவன் ஆர்ட்ஸ்’ விஜயகுமார் வெளியிட நடிகர் விஜயசேதுபதி பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய பலரும் தான் ஒரு மலையாளிஎன்றும் முதல் தமிழ்ப்படத்தில் பங்கேற்கிறேன் தனக்குத் தமிழ் சரளமாக பேச வராது மன்னிக்கவும் என்றும் வெளிப்படையாகக் கூறியது அவர்களது மொழிப்பற்றை மட்டுமல்ல நேர்மையையும் காட்டியது.

0 comments:

Post a Comment