Wednesday, 5 February 2014

Leave a Comment

6 நாட்களில் 3 கிலோ எடை குறைத்த பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரி ...




பாலிவுட் நடிகை நர்கிஸ் ஃபக்ரி வெறும் 6 நாட்களில் 3 கிலோ எடை குறைத்துள்ளார். நடிகைகள் தாங்கள் படங்களில் சிக்கென்று இருக்க வேண்டும் என்பதற்காக உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பார்கள்.

ஆனால் தற்போது பெரும்பாலான பெண்கள் சிக்கென்று இருக்க விரும்புவதால் அவர்களும் உணவு கட்டுப்பாட்டில் இறங்கிவிட்டனர். ராக்ஸ்டார் இந்தி படம் மூலம் நடிகை ஆனவர் மாடலான நர்கிஸ் ஃபக்ரி. அவரது புது உணவு கட்டுப்பாட்டு பற்றி பார்ப்போம்.

நர்கிஸ் வருண் தவான், இலியானாவுடன் சேர்ந்து மெய்ன் தேரா ஹீரோ என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 4ம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக பாங்காக் சென்றபோது நர்கிஸுக்கு ஒரு ஐடியா தோன்றியுள்ளது.

உணவு எதுவும் சாப்பிடாமல் பழச்சாறு மட்டும் குடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசை நர்கிஸு்ககு இருந்துள்ளது. இதை அவர் பாங்காக் ஷூட்டிங்கின்போது நிறைவேற்றியுள்ளார்.

நர்கிஸ் 6 நாட்கள் வெறும் பழச்சாறு மட்டும் குடித்து வந்துள்ளார். இந்த 6 நாட்களில் அவர் 3 கிலோ எடை குறைந்துள்ளார்.

நர்கிஸ் தான் உடல் எடையை குறைத்ததோடு மட்டும் அல்லாமல் இலியானாவையும் பழச்சாறு டயட்டில் இருக்க வைத்துள்ளார். ஆனால் இலி ஒரு நாள் மட்டுமே பழச்சாறு டயட்டில் இருந்துள்ளார்.

பாலிவுட் நடிகைகள் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு உடல் எடையை குறைத்து பென்சில் போன்று இருக்கின்றனர். அதில் வித்யா பாலன், சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்ட சிலர் மட்டுமே விதிவிலக்காக பூசினாற் போல் உள்ளனர்.

0 comments:

Post a Comment