Monday, 10 February 2014

Leave a Comment

காணாமல் போன கணவனை தேடும் அபலை பெண்ணாக - நயன்தாரா...



கணவனை தேடும் பெண்ணாக நயன்தாரா நடித்துவரும் படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற ' கஹானி' படத்தை தமிழில் தயாரிக்கும் ‘வயா காம் 18 மோஷன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தங்களது முதல் படத்துக்கு நல்ல தலைப்பை தேடி வந்தனர்.

காணாமல் போன கணவனை தேடி வரும் ஒரு அபலை பெண்ணின் கதையை சொல்லும் இந்தப் படத்திற்கு இப்போது ' நீ எங்கே என் அன்பே ' என்ற பொருத்தமான தலைப்பை தெரிவு செய்துள்ளனர்.

இந்தியில் வித்யா பாலன் நடித்த கேரக்டரில் தமிழ் – தெலுங்கில் நயன்தாரா நடிக்கிறார். இந்தப் படத்தை சேகர் காமுளா இயக்கி வருகிறார்.

இந்த மாதம் இறுதியில் திரைக்கு வர தயாராக உள்ள ' நீ எங்கே என் அன்பே ' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா வருகிற 14ம் திகதி நடைபெறவுள்ளது.

0 comments:

Post a Comment