ஜி.வி.பிரகாஷ்குமார் - ஸ்ரீதிவ்யா இணைந்து நடித்துவரும் பென்சில் திரைப்படக்குழு காதலர் தின ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
மண்டியிட்டு அமர்ந்தவாறு ஒரு பூங்கொத்தினை ஸ்ரீதிவ்யாவை நோக்கி நீட்டுகிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். அதே இடத்தில் கழுத்தில் தூக்குக்
கயிறு போன்ற ஒன்றை சுருக்கிட்டுத் தூக்கிப் பிடித்தவாறு நின்றிருக்கிறார் ஸ்ரீதிவ்யா. மிக அழகான பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இப்போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அறிமுக இயக்குனர் மணி நாகராஜ் இயக்கிவரும் இப்படத்தினை கல்சன் மூவீஸ் தயாரித்துவருகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் நடிகராக அறிமுகமாகும்
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷே இசையும் அமைத்துள்ளார்.
இப்படத்தில் பள்ளி மாணவனாக நடித்துவரும் ஜி.வி.பிரகாஷ்குமார் தனது வேடத்திற்காக சுமார் ஒன்பது கிலோ எடையைக் குறைத்திருப்பதாகக்
கூறப்படுகிறது. இவ்வாண்டு மத்தியில் இப்படம் திரைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:
Post a Comment