Wednesday, 26 February 2014

Leave a Comment

என் பேவரிட் ஹீரோ அஜீத்துடன் நடிப்பேன்..! - நஸ்ரியா



தொப்புள் சமாச்சாரத்துக்குப்பிறகு நஸ்ரியாவின் மார்க்கெட் வீழ்ச்சி கண்டாலும் தட்டுத்தடுமாறி எழுந்து நிற்கிறார் என்றே தெரிகிறது. காரணம், தங்களது படங்களை தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் வெளியிட வேண்டும் என்று நினைக்கும் டைரக்டர்கள் சிலர் அவரையே ஒப்பந்தம் செய்துள்ளனர்.

அதனால் நய்யாண்டிக்கு பிறகு தனது மார்க்கெட் சரிந்து விட்டதாக சொல்லப்படும் கருத்து தவறு என்று கூறும் நஸ்ரியா, நான் எப்போதும் போலவே இப்போதும் பிசியாகத்தான் இருக்கிறேன்.

என்னை எந்த டைரக்டர்களும் நிராகரிக்கவில்லை என்று கூறி வருகிறார். அதோடு, ஏற்கனவே தனுஷ், ஆர்யா, ஜெய் போன்ற நடிகர்களுடன் நடித்து விட்ட நான் கூடிய சீக்கிரமே விஜய், அஜீத், சூர்யா என்று ஜோடி சேரக்கூடிய நேரமும் வந்துகொண்டிருக்கிறது என்கிறார்.

குறிப்பாக, எனது பேவரிட் ஹீரோவான அஜீத்துடன் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு. அதனால் கைவசம் இருக்கும் படங்களுக்குப்பிறகு அவருடன் நடிப்பேன் என்று நினைக்கிறேன் என்று சொல்லும் நஸ்ரியா, யாரையும் தேடிச்சென்று மட்டும் சான்ஸ் கேட்க மாட்டாராம்.

அப்படி தானாக இறங்கி சென்றால் அவர்கள் கிளாமராக நடிக்க சொல்வார்கள். ஆனால் அவர்களே என்னைத்தேடி வந்தால் நான் சொல்ற மாதிரி கேட்பார்கள், என் பேச்சுக்கும் மரியாதை இருக்கும் என்கிறார் நஸ்ரியா.

0 comments:

Post a Comment