உலக நாயகன் கமல்ஹாசனும், சூப்பர் ஸ்டார் ரஜினியும் இணைந்து நடிப்பார்களா என்ற எண்ணம் ஒவ்வொரு தமிழ் சினிமா ரசிகனுக்கும் இருக்கிறது என்பது உண்மையே.
தமிழ் சினிமாவின் இவ்விரு துருவங்களும் இணைய வேண்டுமானால் இவர்களின் சம்பளமே படத்தின் பட்ஜெட்டை எகிறடித்துவிடும் என்ற தயாரிப்பாளர்களின் பயமும் நியாயமானதே.
ஆனால் சமீபமாக கமல்ஹாசன், சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் தான் ரஜினியுடன் நடிப்பதனால் தனக்கு சம்பளமே தர வேண்டாம் என்று கூறியுள்ளார். அதே சமயம் ரஜினியைப் பற்றி தான் எதுவும் கூறுவதற்கில்லை என்றும் கூறியுள்ளார்.
அப்போ கமல்-ரஜினி இணைவது இனி ரஜினியின் முடிவில் தான் இருக்கிறது என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
விரைவில் ஒரு நல்ல முடிவு எடுக்கப்பட்டு இவ்விரு துருவங்களும் ஒரே படத்தில் இணைந்து நடித்தால் அது தமிழ் சினிமாவின் மிக முக்கிய மைல்கல்லாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.

0 comments:
Post a Comment