ருத்ரம்மாதேவி படத்தில் ஒரிஜினல் தங்க கிரீடத்தில் ஜொலிக்கிறாராம் அனுஷ்கா.
அனுஷ்கா நடித்து வரும் தெலுங்குப் படத்தில் ‘ருத்ரம்மாதேவி’யாகவே மாறிவிட்டார்.
இப்படத்திற்காக பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமான செட்களும், ஆடை அலங்காரங்களும் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இப்படத்தில் இடம்பெறும் ராணி ருத்ரம்மாதேவியின் கிரீடம் தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரிஜினல் தங்கத்தையே பயன்படுத்தி அதை உருவாக்கியிருக்கிறார்களாம்.
இதுதவிர இப்படத்தில் அனுஷ்காவின் உடைகள் ஒவ்வொன்றையும் ஆராய்ச்சி செய்து தேடிக் கண்டுபிடித்து உருவாக்கியிருக்கிறாராம் கலை இயக்குனர் தோட்டா தரணி.
இந்தியாவின் முதல் வரலாற்று 3டி படம் என்ற பெருமையோடு உருவாகி வரும் இப்படத்தை குணசேகர் இயக்க, இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

0 comments:
Post a Comment