இயக்குனர் ஆசைக்கு முழுக்கு போட்டு நடிப்பு கணக்கு தொடங்கினார் அக்ஷரா. கமலின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் நடிக்க வந்துவிட்டார். ஆனால் அவரது இளைய மகள் அக்ஷராவுக்கு இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசையே இருந்தது. பாலிவுட்டில் ஒரு சில இயக்குனர்களிடம் உதவியாளராகவும் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவரை நடிக்க வைக்க பலர் முயன்றனர்.
வாய்ப்பை ஒதுக்கி தள்ளிவந்த அக்ஷரா இறுதியில் நடிக்க சம்மதித்தார். ராஞ்சனா படம் மூலம் ஏற்கனவே இந்தியில் அறிமுகமான தனுஷ் அடுத்து பால்கி டைரக்ஷன் செய்யும் படத்தில் நடிக்கிறார். இதில் தனுஷ் ஜோடியாக அக்ஷரா அறிமுகமாகிறார். இயக்குனர் ஆசையில் இருந்து வந்த அக்ஷரா தனது தோற்றத்தின் மீது அக்கறை காட்டாமல் இருந்தார். நடிக்க முடிவு செய்தபின் அதற்கேற்ப தனது தோற்றத்தை மாற்றி வருகிறார். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி என கவனம் செலுத்தி அவசர கதியாக கேமராவுக்கு ஏற்ப உருவத்தை மாற்றிக்கொண்டிருக்கிறார்.
கிளாப் பிடித்துக்கொண்டு ரெடி டேக் என்ற சொல்லிக்கொண்டிருந்தவர், இப்போது மேக்கப் பாக்ஸும் கையுமாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். தனுஷ்-அக்ஷரா நடிக்கும் பட ஷூட்டிங் சமீபத்தில் மும்பையில் தொடங்கியது. தனுஷுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சியில் அக்ஷரா நடித்தார். இந்த படத்துக்கு இளையராஜா இசை அமைக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். அமிதாப்பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

0 comments:
Post a Comment