பெரிய, சிறுபட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்யும் நடைமுறை ஏப்ரல் முதல் தியேட்டர்களில் அமல்படுத்தப்படுகிறது. பெரிய நடிகர்கள் நடித்த படங்கள், பெரும்பொருட்செலவில் தயாராகும் பிரபல இயக்குனர்களின் படங்களை ரிலீஸ் செய்ய போட்டிபோட்டு தியேட்டர்கள் ஒதுக்கப்படுகின்றன.
இதனால் சிறுபட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காமல் ரிலீஸ் செய்ய முடிவதில்லை என்ற பிரச்னை நீண்ட நாட்களாக கோலிவுட்டில் நிலவி வருகிறது. படங்கள் ரிலீஸ் செய்வதை முறைப்படுத்தி சிறுபட்ஜெட் படங்களையும் ரிலீஸ் செய்யும் விதமான நடைமுறையை கொண்டுவருவது பற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருகின்றன. இதற்காக இயக்குனர்கள், தயாரிப்பாளர் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் முன்னிலையில் அக்குழு சந்தித்து பேசி வருகிறது. இதற்கான வழிமுறைகள் ஆலோசிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன. அதனை விரைவில் நடைமுறைபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சங்க செயலாளர் டி.சிவா கூறும்போது, சிறுபட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்வதற்கான வழிமுறைகள் பெரும்பகுதி வகுக்கப்பட்டுவிட்டது.
வரும் ஏப்ரல் மாதம் முதல் இது நடைமுறைபடுத்துவதற்கான முயற்சிகள் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் ஆலோசனை குழு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

0 comments:
Post a Comment