சசிகுமார் நடிக்கும் படம் பிரம்மன். இதுபற்றி அப்பட இயக்குனர் சாக்ரடீஸ் கூறியதாவது: ஹீரோக்களை பார்த்துதான் ஒரு படத்தின் மீது ஈர்ப்பு வரும். கமல், ரஜினியின் படங்கள் என்னை ஈர்த்தன.
அவர்களின் படங்களை பார்த்தே சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை வந்தது. கமலிடம் பல ஆண்டுகளாக உதவி இயக்குனராக பணியாற்றினேன். ஜனரஞ்சகமான கதைகள் வெற்றிபெற வெகுஜனங்களின் மனதில் பதிந்த ஹீரோ நடிக்க வேண்டும்.
கமல், ரஜினி நடித்த படங்கள் அதனால்தான் எளிதாக சென்றடைந்தது. அந்த வகையில் பிரம்மன் கதையும் ஜனரஞ்சகமானது. அதில் நடிக்க சசிகுமார் பொருத்தமாக இருப்பார் என்று எண்ணினேன். அவர் கால்ஷீட் தந்தால்தான் இப்படத்தை இயக்குவது என்ற முடிவோடு இருந்தேன்.
அதற்காக அவரிடம் கதை சொல்ல கடந்த 2 ஆண்டுகளாக முயன்றேன். மற்ற படங்களில் நடித்துக்கொண்டிருந்ததால் பிஸியாக இருந்தார். பிறகு அவரே அழைத்து கதை கேட்டார். பிடித்திருக்கவே நடிக்க ஒப்புக்கொண்டார்.
கிராமத்து பின்னணியில் நடித்து வந்த சசிகுமார் நடிக்கும் நகரத்து பின்னணி கதையாக இது உருவாகிறது. ஹீரோயின் லாவண்யா. தேவி ஸ்ரீபிரசாத் இசை அமைக்கிறார். கே.மஞ்சு, ஆண்டோ ஜோசப் தயாரிக்கிறார்.
இவ்வாறு இயக்குனர் சாக்ரடீஸ் கூறினார்.
0 comments:
Post a Comment