Wednesday, 5 February 2014

Leave a Comment

கலகலப்பான காதல் பஞ்சாயத்து....!!!




சினிமாவுக்கு முற்றிலும் புதிதானவர்கள் இணைந்து காதல் பஞ்சாயத்து என்ற படத்தை எடுக்கிறார்கள். ரைட், நேகா ஹீரோ, ஹீரோயினாக நடிக்கிறார்கள்.

 வில்லன் தேவராஜன், காமெடியன் சிராலி, சூர்ய சந்திரஹாசன் ஆகியோரும் புதுசு. அருள்ராஜ் கேமரா மேன், ஜான்சன் இசை அமைக்கிறார்.

"கிராமத்தில் நடக்கும் காதல் பஞ்சாயத்துக்களை நாட்டாமையாக இருந்து தீர்த்து வைக்கும் ஹீரோவுக்கும் காதல் வந்து விடுகிறது.

அவரது காதலை ஊர் பஞ்சாயத்து விசாரிக்கிறது. இதுவரை தான் சொன்ன தீர்ப்பெல்லாம் தப்புன்னு ஹீரோ உணர்ந்து தன்னால் பிரிந்த ஜோடிகளை சேர்த்து வைத்து தன் ஜோடியையும் கைபிடிக்கிற ஜாலியான கதை.

முழு நீள காமெடிப் படமாக உருவாக்குறோம்" என்கிறார் டைரக்டர் கலைசங்கர்.

0 comments:

Post a Comment