Wednesday, 5 February 2014

Leave a Comment

7ந் தேதி - 7 படங்கள் ரிலீசாவதால் ஆஹா கல்யாணம் 21ந் தேதி...


நானி-வாணிகபூர் நடித்த ஆஹா கல்யாணம் வருகிற 7ந் தேதி ரிலீசாவதாக இருந்தது. அன்றைய தினமே புலிவால், பண்ணையாரும் பத்மினியும் உள்பட 7 படங்கள் வரை ரிலீசாகிறது.

அதனால் ஆஹா கல்யாணம் பிப்ரவரி 21ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இடையில் வரும் 14 ந் தேதி இது கதிர்வேலன் காதல், ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை, நிமிர்ந்து நில், சந்திரா படங்கள் ரிலீசாகிறது. இதனால்தான் ஆஹா கல்யாணம் 21ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

பிரபல இந்திப்பட நிறுவனமான யாஷ் சோப்ரா நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் படம் இது.

திருமண ஏற்பாடு செய்யும் நிறுவனம் நடத்தும் இருவருக்கு இடையில் வரும் காதலை கலகலப்பாக சொல்லும் படம். சிம்ரன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். கோகுல் டைரக்ட் செய்துள்ளார். தருண் குமார் இசை அமைத்துள்ளார்.

0 comments:

Post a Comment