ஒரு திரைப்படத்தின் பாடல் வெளியீடு என்பது அந்த படத்திற்கான ஒரு புரமோஷன். படத்தின் தரம், என்னமாதிரியான கதை, பாடல் காட்சிகள் எப்படி எடுக்கப்பட்டுள்ளது என்பதை மீடியாக்களும், மீடியேட்டர்களும், விநியோகஸ்தர்களும் அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தை தரும் விழா.
"ஒரு பெண் திருமணத்து தயார் என்பதை தெரிவிக்க பூப்புனித நீராட்டு விழா நடத்துவதைப்போலத்தான் படத்தின் இசை வெளியீட்டு விழா" என்பார் வைரமுத்து.
ஆனால் இப்போது இந்த விழாக்கள் எப்.எம்.ரேடியோக்களின் பத்துக்கு பத்து அறையில் நடத்துப்படுகிறது.
படத்தின் நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அந்த சிறிய அறையில் உட்கார்ந்து கொண்டு பாடலை வெளியிடுகிறார்கள் ஒரு மணி நேர அந்த நிகழ்ச்சில் நான்கு நேயர்கள் பேசி இவர்கள் படத்தை பற்றி பேசி... இப்படியாக முடிந்து விடுகிறது இந்த பாடல் வெளியீட்டு விழாக்கள்.
இது சில ஏழைக் குடும்பங்களில் வீட்டோடு விழா நடத்துவார்களே அதைப்போன்றது.
எதிரில் ரசிகர்களோ, பொதுமக்களோ இல்லாமல் பாடல் சிடியை வெளியிட்டு சிரித்துக் கொண்டே போஸ் கொடுக்கிறார்கள்.
"ஆள் இல்லாத கடையில் யாருக்குய்யா டீ ஆத்துற" என்கிற காமெடி வசனம்தான் நினைவுக்கு வருகிறது. நேற்று மட்டும் ஒரு கன்னியும் முணு களவானிகளும், ஆள், சிவப்பு எனக்கு பிடிக்கும் ஆகிய மூன்று படத்தின் பாடல் வெளியீட்டு விழா எம்.எம்.ரேடியோ அறையில் நடந்துள்ளது.
செலவை சிக்கனப்படுத்த என்று வைத்துக் கொண்டால் இதைவிட செலவை சிக்கனப்படுத்த ஆயிரம் வழிகள் இருக்கிறது சினிமாவில்.
0 comments:
Post a Comment