சென்னை எக்ஸ்பிரஸ் படத்துக்காக ரஜினியை வாழ்த்தி பாடும் ஸ்பெஷல் குத்தாட்டத்திற்காக ஷாருக்கான், தீபிகா படுகோன் லுங்கி கட்டிக்கொண்டு லுங்கி டான்ஸ் ஆடியது பிரபலம் ஆனது. இதையடுத்து தமிழில் மான் கராத்தே படத்துக்காக ஹன்சிகா லுங்கி டான்ஸ் ஆடினார்.
இந்த ஜுரம் டோலிவுட்டுக்கும் பரவி உள்ளது. கனகவேல் காக்க, முரண் படங்களில் நடித்த ஹரிபிரியா டோலிட்வுட்டில் கலாட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்காக லுங்கி கட்டிக்கொண்டு டான்ஸ் ஆட வேண்டும் என்று இயக்குனர் கிருஷ்ணா கேட்டார். ஆனால் அவரோ லுங்கியை தொடை தெரிய தூக்கிக்கட்டிக்கொண்டு ஆடினால் ஆபாசமாக இருக்குமே என்று நடிக்க தயங்கினார்.
ஆபாசம் இல்லாமல் ஷூட் செய்வதாக இயக்குனர் சமாதானம் செய்தபிறகு ஓகே சொன்னார். இது பற்றி ஹரிபிரியா கூறும்போது,ஆரம்பத்தில் லுங்கியை மடித்து கட்டிக்கொண்டு ஆடவேண்டும் என்றவுடன் ஷாக் ஆகிவிட்டேன். எனக்கு சந்தேகமாகவே இருந்தது. ஒரு வேளை ஆபாசமாக அமைந்துவிடுமோ என்று பயந்தேன். ஆனால் இயக்குனர் சமாதானம் சொன்னபிறகு நம்பிக்கை வந்தது. நடிக்க ஒப்புக்கொண்டேன்.
படத்தில் எனது அறிமுக பாடல் அது. லுங்கிக்கட்டிக் கொண்டபிறகு ஜாலியாக ஆடி முடித்தேன் என்றார். டைரக்டர் சமாதானப்படுத்தினாலும் ஹரிப்பிரியா நடித்த அந்த பாடல் காட்சி ஓவர் கவர்ச்சியாகவே உள்ளது என்கிறது பட யூனிட்.

0 comments:
Post a Comment