Monday, 17 February 2014

Leave a Comment

வெளிச்சத்திற்கு வந்த பாலாவின் மறுபக்கம்...!



காலம் சென்ற பாலு மகேந்திராவின் உடலுக்கு அவரது மூன்றாவது மனைவியான மௌனிகாவை அஞ்சலி செலுத்த விடாமல் தடுத்தார் என்று இயக்குநர் பாலா மீது பலரும் பரவலாக குற்றம்சாட்ட ஆரம்பித்துள்ளனர்.

இயக்குநர் பாலு மகேந்திராவுக்கு கிட்டத்தட்ட வளர்ப்பு மகன் மாதிரி இருந்தவர்தான் பாலா. பாலு மகேந்திராவின் மனைவி அகிலாவையே தன் சொந்தத் தாயாக பாவித்து வந்தார். வெளியிலும் அவர் அப்படித்தான் சொல்லிக் கொள்வார்.

பாலு மகேந்திரா 2000-ல் நடிகை மௌனிகாவை திருமணம் செய்து கொண்டார். இதனை ஒரு பத்திரிகை மூலம் ஊர் உலகத்துக்கு அம்பலமாக்கியும்விட்டார்.

பாலாவுக்கு தேவையா இது? இருவரும் சிலமுறை கணவன் மனைவியாக நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்தனர்.

இந்த நிலையில்தான் பாலு மகேந்திரா மரணத்தைத் தழுவினார். அவருக்கு மாரடைப்பு என்ற தகவல் வந்ததுமே, விஜயா மருத்துவமனைக்கு விரைந்திருக்கிறார் மௌனிகா. ஆனால் பாலாதான், 'இந்தப் பக்கம் மௌனிகா வந்தால் நடப்பதே' வேறு என்று மிரட்டியதாக குற்றம்சாட்டியுள்ளார் மௌனிகா.

அதன்பிறகு பாலுமகேந்திரா மரணித்துவிட்ட செய்தி வந்ததும், ஒரு மனைவியாக அவருக்கு அஞ்சலி செலுத்த முயன்றபோது, மௌனிகா வரக்கூடாது என்பதில் அடமாக இருந்தாராம் பாலா. மூத்த இயக்குநர் பாரதிராஜாவே கூறியும்கூட, இந்த விஷயத்தில் பாலா சமாதானமாகவில்லைாயாம்.

பாலு மகேந்திராவின் மனைவி அகிலா, மகன் ஷங்கி போன்றவர்களே கூட, சரி பரவாயில்லை, வந்துவிட்டுப் போகட்டும் என்று கூறிய பின்னரும் மௌனிகாவை வர விடாமல் தடுத்து நின்றது பாலாதான் என்கிறார்கள்.

 பின்னர் இயக்குநர் சங்க நிர்வாகிகள், பாரதிராஜா உள்ளிட்டோர் மீண்டும் பாலாவிடம் பேசிய பிறகே அமைதியானாராம். நிலைமை புரிந்து போலீஸ் துணையுடன் வந்து அஞ்சலி செலுத்திவிட்டுப் போனார் மௌனிகா.

 'தாலி கட்டிய கணவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஒரு மனைவிக்குள்ள உரிமையைத் தடுக்க பாலா யார்?' இதுதான் பாலாவின் நண்பர்களே கூட இப்போது எழுப்பும் கேள்வி.

0 comments:

Post a Comment