Friday, 7 February 2014

Leave a Comment

கோலிவுட்டில் மீண்டும் மார்க்கெட் பிடிக்க போராடும் பத்மபிரியா..!



கோலிவுட்டில் மீண்டும் மார்க்கெட் பிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார் பத்மபிரியா. மிருகம், பழசிராஜா, சத்தம் போடாதே, பொக்கிஷம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் பத்மபிரியா. பொக்கிஷம், பழசிராஜா போன்ற படங்களில் அவரது நடிப்பு பேசப்பட்டது.

ஆனால் அந்த அளவுக்கு வாய்ப்புகளை பெற்றுத் தரவில்லை. கிளாமராக நடித்தால்தான் சினிமாவில் நிலைக்க முடியும் என்று சிலர் அட்வைஸ் தந்ததையடுத்து பட்டியல் படத்தில் குத்துப் பாடலுக்கு படுகவர்ச்சியாக நடனம் ஆடினார்.

 அதுவும் எடுபடாமல் போனது. மலையாளத்திலும் இதே நிலை நீடித்ததால் மனம் நொந்தார். பட வாய்ப்புக்காக காத்திருந்து நாட்களை கழிப்பதைவிட படிப்பை தொடரும் முடிவோடு வெளிநாடு சென்று பட்டமேற்படிப்பு படித்தார்.

புதுப்பட வாய்ப்பு வரும் என எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றம் மிஞ்சியது. இந்நிலையில், சசிகுமார் நடிக்கும் பிரம்மன் படத்தில் குத்து பாடலுக்கு நடனம் ஆட வாய்ப்பு வந்தது. இதை பயன்படுத்தி மார்க்கெட் பிடிக்கலாம் என்ற எண்ணத்தில் ஒப்புக் கொண்டார். வாடா வாடா நண்பா என்ற பாடல் சமீபத்தில் படமாக்கப்பட்டது. இதுவும் கைகொடுக்காவிட்டால் பெரிய சம்பளத்துக்கு வெளிநாட்டு கம்பெனியில் வேலைக்கு போக முடிவு செய்திருக்கிறாராம்.

0 comments:

Post a Comment