Monday, 17 February 2014

Leave a Comment

அஜீத்தின் சால்ட் அண்ட் பெப்பரில் மயங்கிய மல்லுவுட் ஹீரோக்கள்...!



அஜீத்போல் சால்ட்  அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலுடன் மல்லுவுட் ஹீரோக்களும் நடிக்கின்றனர்.

ஹீரோக்கள் என்றாலே படத்திலும் சரி, நிஜத்திலும் சரி நரைத்த முடி ஒன்று தெரிந்தால்கூட உடனே கறுப்பு டை அடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். அந்த பாணியை முதலில் உடைத்தவர் ரஜினிதான்.

சினிமாவில் மட்டுமே மேக்அப் போட்டு நடிக்கும் அவர் நிஜத்தில் நரைத்த வழுக்கை தலை முடி, வெள்ளை தாடி, மீசையுடன் பொது இடங்களில் வந்தார்.

ஆனால் அவரையே மிஞ்சும் வகையில் சினிமாவில் கூட  நரைத்த முடி வேண்டாம் தனது நிஜ சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிலே நடிக்க அஜீத் முடிவு செய்தார்.

அதன்படி தொடர்ந்து மங்காத்தா, ஆரம்பம், வீரம் என அடுத்தடுத்து படங்களில் நடித்தார்.

இந்த பாணி தற்போது மல்லுவுட்டில் பரவி வருகிறது. செவன்த் டே படத்தில் பெப்பர்-சால்ட் தோற்றத்தில் பிருத்விராஜ் நடிக்கிறார்.

தற்போது இதன் ஷூட்டிங் கொச்சியில் நடக்கிறது. ஆஷிக் அபு இயக்கும் தி கேங்ஸ்டர் படத்தில் மம்மூட்டி சில காட்சிகளில் பெப்பர்-சால்ட் ஹேர் ஸ்டைலில் நடிக்கிறார்.

அதேபோல் ஜோஷி இயக்கும் புதிய மலையாள படத்தில் மோகன்லால் பெப்பர்- சால்ட் தோற்றத்தில் நடிக்கிறார்.

0 comments:

Post a Comment