Wednesday, 19 February 2014

Leave a Comment

திருமணமே வேண்டாம்..! பாய்பிரண்ட் மட்டுமே போதும்..!



ஃபுல் டைம் பாய்பிரண்ட் தனக்கு தேவையில்லை என்றார் கங்கனா ரனவத். தாம் தூம் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்தவர் பாலிவுட் நடிகை கங்கனா ரனவத். அவர் கூறியது:

எனக்கு சில பாய்பிரண்டுகள் இருந்தது உண்மைதான்.

அவர்களை பிரிந்துவிட்டேன். அதற்கு காரணம் ஆராய விரும்பவில்லை. ஆனால் அவர்கள் சொல்கிறபடி கேட்டுக்கொண்டு, அவர்கள் விரும்புகிறபடி நடந்துகொண்டு இருக்க என்னால் முடியாது. ஃபுல் டைம் பாய்பிரண்டாக இருக்க அவர்கள் விரும்புகிறார்கள். எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது.

காதல் செய்வது மட்டுமே எனது வேலை கிடையாது. அதனால் ஃபுல் டைம் பாய்பிரண்ட் எனக்கு தேவையில்லை. இப்போது வெளிநாட்டு வாலிபருடன் நல்ல நட்பில் இருக்கிறேன்.

டேட்டிங் செல்கிறேன். இந்திய ஆண்கள் பிடிக்கவில்லையா என கேட்கிறார்கள். எனக்கு கிடைத்திருக்கும் இந்த புது பாய்பிரண்ட், என்னை புரிந்து வைத்துள்ளார்.

 இதை விட வேறு என்ன தேவை? திருமணம் செய்யும் எண்ணமே எனக்கு கிடையாது.

திருமணம் செய்துகொள்ள விரும்புகிறவர்கள், அல்லது திருமணம் செய்தவர்கள் கண்டிப்பாக மனநல மருத்துவரை பார்க்க வேண்டும். அவர்களுக்கு கண்டிப்பாக ஏதாவது கோளாறு இருக்கும்.

காரணம், திருமணத்துக்கு பிறகு மனைவியிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அதையெல்லாம் நிறைவேற்றுவதுதான் பெண்ணின் வேலையா?

இவ்வாறு கங்கனா கூறினார்.


0 comments:

Post a Comment